Saturday, December 27, 2014

சுட்டவடு - சிறுகதை - சரவணன் ஆர்.எஸ்.கே

சிறுகதைப் போட்டி எண் - 2

எழுதியவர் - சரவணன் ஆர்.எஸ்.கே



இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. முத்து காணாமல் போய்விட்டான். காணாமலே போய்விட்டான்.
காலையில் எழுந்ததும் நேரே செந்தில் வீட்டை நோக்கி நடந்தேன். எதிர்பார்த்த மாதிரியே செந்திலும் வீட்டு வாசலில் லுங்கியில் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும்... வேக வேகமாக எழுந்து வந்து
"என்னாடா முத்து வந்துட்டானா இல்லையா?!"
"எல்லாம் உன்னால தான்... அவன் இன்னும் வரல ... எங்க போய் தொலைஞ்சான்னும் தெரியல , "
"சரி விடுறா... மேட்டரு உனக்கும் எனக்கும் மட்டுந்தானே தெரியும். அத்தோட மறந்திரு ஆமா !" -செந்தில்.
மறக்கக் கூடிய விசயமா அது ?!
நல்லா ஞாபகமிருக்கு.
முத்து.
எங்களை விட ரெண்டு வயசு சிறியவன். படிப்பறிவு இல்லாதவன். நாங்க வாரம் ஒருமுறை சரக்கடிக்கும் போதெல்லாம் கூட வந்து உட்கார்ந்துக்குவான். அவன் விதி அன்னிக்கும் வந்தான்.
"அண்ணே! இந்தாங்க ஊறுகா பாக்கெட்டு. சிகரெட்டு. மீதி ஒர்ரூவா. " -முத்து
"சரிடா சரிடா. நீயும் ஒரு கட்டிங்ஐப் போட்றியா"- நான் இழிப்புடன்
"ஹி ஹி வேணான்னே "- முத்து.
"டேய் முத்து! நூறு ரூவா தர்றேன் . ஒரு நைட்டு நம்மூரு சுடுகாட்ல தங்கணும் டீலா ?" - செந்தில்
எனக்குப் புரிந்துவிட்டது. செந்திலுக்கு செமையாக ஏறிட்டு. ஆமா, எப்போ நாங்க இந்த வைக்கோல் படப்பு மறைவில சரக்கடிச்சாலும், முத்துவை வைத்து ஏதாவது ஒரண்ட இழுப்பான் செந்தில். இன்னைக்கு இப்படி. ரைட்டு.
"ஆமான்டா.. நானும் தர்றேண்டா நூறு ரூவா... ஆனா செந்தில் சொன்னத பண்ணனும். "
"ஐயையோ ஆள விடுங்கண்ணே... நூறு ரூவாக்கு சாவச் சொல்றீங்களா ? நம்மாள முடியாதுண்ணே "
செந்தில் போதையின் உச்சத்திற்கு போய்விட்டான் என்பது அடுத்தடுத்து அவன் பேசிய வார்த்தைகளில் தெரிந்தது.
ஆனால் எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டான்.
சம்பவ தினம்.
இரவு பத்து மணி.
நான் , செந்தில் மற்றும் முத்து சுடுகாட்டுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில்...
"டேய் முத்து ! விடியற வரை நாங்க இங்கேயேதான் இருப்போம். மவனே பாதியில திரும்பி வந்த... அவ்வளோதான்.. ஒங்கம்மா சேர்த்து வெச்சிருக்க ரூவால தான் லைஃப் ஃபுல்லா சரக்கு வாங்கித் தரணும். "- ஏறத்தாழ மிரட்டினான் செந்தில்.
இழித்தேன் நான்.
முறைப்புடன் விறுவிறுவென சுடுகாட்டை நோக்கி நடந்தான் முத்து.
அவ்ளோதான்.
அதுதான் முத்துவைக் கடைசியாக நாங்க பார்த்தது.
பாவம் அவன் அம்மா.. மறுநாள் மதியம் வந்து முத்துவைப் பார்த்தீயானு விசாரித்தாள்.
இல்லைனு கூசாம பொய் சொன்னேன். செந்திலும் தான். ஆனா மூணு நாளா காணவில்லைங்கறது பதற்றத்தை உருவாக்கியது.
பின்னே இருக்காதா ! முத்து அவன் அம்மாவிற்கு ஒரே பிள்ளை. அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு.
வருமானத்திற்கு பத்துப் பாத்திரம் தேய்ப்பாள். விறகு வெட்டுவாள். வேற மாதிரி தொழிலும் செய்வதாகக் கேள்வி. ஆனாலும் 25 வயசானாலும் விவரம் புரியாத மகன் முத்து என்றால் அதீத பாசம்.
உண்மையில் என்ன நடந்தது? முத்து சுடுகாட்டுக்குப் போனதைப் பார்த்தோம். கொஞ்ச நேரம் அவன் திரும்பி வர்றானா என காத்திருந்தோம். வரவில்லை.
சுடுகாடு. அந்தபக்கம் காட்டாறு. ஒரேயொரு ஒத்தையடி்பாதை. வந்தால் இந்தப் பாதை வழியாகத்தான் வரணும். வரவேயில்லை.
காலையில் சென்று பார்த்தால் சுடுகாட்டில் முத்துவைக் காணவில்லை.
ஒருவேளைக் காட்டாற்றுல் விழுந்து செத்துகித்துப் போயிருப்பானோ ?!
அதன்பின்தான் லேசாகப் பயம் வந்தது.
முத்துவின் அம்மா , பக்கத்து வீட்டு வாத்தியார் எல்லார் விசாரிப்புகளுக்கும் தெரியாது எனச் சொன்னோம்.
இரவு .
கதவு படபட என தட்டும் ஒலியால் எழுந்தேன். 

கதவு தட்டப்படும் ஓசை, கரண்ட் இல்ல,
எழுந்து வாசலை அடைந்து கதவைத் திறந்தேன்.
இருட்டு.
கரிய உருவம். தலையில் சாக்குப்பையை வேறு போர்த்திக் கொண்டு...
பக்'கென்று இருந்தது.
"உங்களால தானடா நான் சுடுகாட்டிற்குப் போனேன்" -உருவம்
"டே...டேய் முத்தூஉஉ!! எங்கடாப் போயிருந்த மூணு நாளா? -நான்.கேட்டவாறே முத்துவின் கைகளைத் தொட்டேன் ஐஸ்கட்டியைத் தொட்ட மாதிரி இருந்தது.
"தொடாதடா ! உங்களால தான்டா நான் சுடுகாட்டுக்குப் போனேன் ... இப்போ இப்படி நிக்கிறேன். " -சொன்னதையே சொன்னான்
எனக்கு வியர்வை ஊற்று எடுத்தது. இவன் முத்து தான். ஆனால் முத்து தானா?!
"ஏன்டா அப்படிச் சொன்னீங்க ?" -முத்து
'என்ன சொன்னோம் ?!'
மங்கலாக நினைவு வந்தது.
அன்று...
"முத்து நீ மட்டும் சுடுகாட்ல ஒரு நைட்டு இரு... இந்தா இப்பவே நூறு ரூவா பிடி ! நம்பிக்கை இல்லைனா "-சட்டைப் பையில் ரூபா எடுப்பது போலவே பாவலா காட்டினான் செந்தில் .
"ஆள விடுங்கண்ணே,"- முத்து
"அடிங்க பு**மகனே! ஒங்கம்மா தேவி**னு ஒத்துக்கோ அப்படினா " -செந்தில் போதையேறிட்டாலே இப்படித்தான் ..
முறைத்துப் பார்த்தான் முத்து.
"எங்கம்மாவ தப்பாப் பேசாதீங்கண்ணே "
"கோவம் வருதா , அப்படி ஒங்கம்மா தே**யா இல்லைனா நீ நைட்டு சுடுகாட்ல தங்குறா பாக்கலாம் ",-செந்தில்
" ஆங்... இது பேச்சு " -அழகாக போதையுடன் ஒத்தூதினேன் நான்.
"எங்கம்மாவ பத்திப் பேசப்போய் தானடா நான் போனேன் " -முத்து.
கண்கள் மட்டும் இருட்டில் மின்னியது. கண்ணீரோ ?!
"இல்லடா அது வந்.," நான் முடிக்கும் முன்பே,
"மூட்றா.," என ஒற்றை விரலால் நெஞ்சில் கை வைக்க... மின்னல் பாய்ந்தது போல சுரீர் என்று வலித்தது.
டங்டனடனனன... கட்டில் அருகே வைத்திருந்த தண்ணீர் சொம்பு உருண்ட சப்தம்.
திடுக்கென விழித்தேன். அப்படினா கனவா ?! முத்து வரவில்லை.
ஆனால்
இதயப் பகுதியில் , முத்து சுட்டிய பகுதியில் வலி மட்டும் ... நிஜம். !!!!
வியர்வை ஊற்றெடுக்க வலி அதிகரிக்க , "ய்,..ஆஆஆ!!" அலறியே விட்டேன்.
அடுத்த அறையிலிருந்து அம்மா "என்னடா " எனப் பதறி வர...
ஆட்டோவில் குண்டுகட்டாக என்னை ஏற்றுவது மங்கலாகப் புரிகிறது. அம்மா , பக்கத்து வீட்டு வாத்தியார் முகங்களில் பதற்ற ரேகைகள் தெளிவில்லாமல் உணர்ந்தேன்.
"என்னப்பா இது... இவன் கூட்டாளி செந்திலுக்கும் நெஞ்சுவலினு இப்போதான் ஆஸ்பத்திரி கொண்டு போறாங்களாம் ... இப்போ இவனுக்குமா ? ." -,வாத்தியார் அருகிலிருந்த யாரிடமோ புலம்புகிறார் போல
நாடித்துடிப்பு குறைவதை உணர்ந்தேன்.
"27 வயசெல்லாம் ஹார்ட் அட்டாக் வர்ற வயசா ? ! " -வாத்தியார் குரல்.
கடைசியாக நான் கேட்டது அதைத்தான்.
(முற்றும்)

கொள்ளிவாய்ப் பிசாசு - சிறுகதை - ரமேஷ்குமார்

சிறுகதைப் போட்டி எண் - 2

எழுதியவர் - ரமேஷ்குமார்


சென்னைக்கு மிக அருகில் உள்ள ஒரு அழகிய கிராமத்தில் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்த தன்னந்தனியான வீடு.நேரம் சரியாக இரவு 11 மணி
டமார்......
சத்தம் கேட்டு கண்விழித்த கோவிந்தன் மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.
டம்...டம்........டமார்..... டமார்..... டம்...டம்.......
தூக்கம் முழுவதும் கலையாமலேயே சத்தம் வந்த சமையலறையை நோக்கிப் போனான் கோவிந்தன்,சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு படுக்கையை நோக்கிப் போக எத்தனித்த போது,வீட்டின் ஜன்னல்கள் தானே திறந்து கொண்டு படபடவென அடிக்க ஆரம்பித்தது.
“ கோத்தா யார்ராது கைல மாட்ன மவனே செத்தடா ” என்றபடியே பீடியை பற்ற வைத்தான் கோவிந்தன்.அப்போது க்ரீச் என்ற சத்தத்தோடு வாசல் கதவு தானாக திறக்க ஆரம்பிக்க மிச்சமிருந்த கட்டிங்கை வேகமாக குடித்துவிட்டு வெறியுடன் வாசலுக்குச் சென்று லபக்கென்று அங்கே நின்று கொண்டிருந்த பேயைப் பிடித்தான்.
ஆ.......ஆ........ஆ........ஆ..........ஆ என பேய் கொடூரமாக அலற ஆரம்பிக்க உடனே கோவிந்தன்
உ......உ.....உ.....எனக்கும் கத்த தெரியும் மூடுறா வாயை நான் யாருனு தெரிஞ்சு வந்துருக்கியா இல்லை தெரியாம வந்தியா சொல்றா என்றான் ஆவேசத்துடன் பேயை பிடித்த பிடியை விடாமல்
தலைவர் அனுப்பிதான் வந்தனுங்க உங்களை பத்தி எதும் சொல்லல, நான் புதுசுங்க என்னை விட்ருங்க ப்ளீஸ் என கெஞ்ச ஆரம்பித்த பேயை வாசலில் கிடந்த செருப்பை எடுத்து அது பிய்யும் வரை அடித்தான் கோவிந்தன்.
ஏண்டா நேத்து செத்து இன்னைக்கு பேய் ஆன நாய் நீ உன்ன போய் என்கிட்ட அனுப்பி இருக்கானா அந்த பொட்டை அவன் மட்டும் திரும்ப மாட்டட்டும் அவன் பரம்பரையே இல்லாம செய்யுறன் பாரு,....
ஒரு பேய்னு கூட பாக்காம இப்டி புடிச்சு அடிக்கிறீங்களே யாருணே நீங்க என அழுதபடியே கேட்ட பேயை ஏளனமாக பார்த்துவிட்டு தொடர்ந்தான்,
என் பேரு கோவிந்தன்....... கோடாங்கி கோவிந்தன் எனக்கு இன்னொரு பேரும் இருக்கு அது குவாட்டர் கோவிந்தன்,25 வருசத்துக்கு முன்னால பேயோட்றதுதான் என் பொழப்பு......என் வாழ்க்கை, அப்பஎல்லாம் என்ன பார்த்தாலே எல்லாப் பேயும் அலறிஅடிச்சு ஓடும்,ஒரு நாள் ரத்தகாட்டேரியை கண்டதுண்டமா வெட்டி எறிஞ்சுட்டு வரும்போதுதான் பிசாச பார்த்தேன் அது மிஷ்கினோட பிசாசு இல்ல உன் தலைவன் கொள்ளிவாய் பிசாசு......
அப்புறம் என்னாச்சுணே.....
மயிராச்சு.....குறுக்க பேசுனே இன்னொரு செருப்பும் பிஞ்சு போய்ரும் மூடிட்டு சொல்றத கேளுடா......அப்பதான் மொதமொறையா அவனைப் பாக்குறேன் தெனவெட்டா என்கிட்ட வந்து நிறுத்து எல்லாத்தையும் நிறுத்துனு சொன்னான் இல்லனா என்னடா பண்ணுவனு கேட்டதுக்கு பொறந்த என் பையன கொன்னுடுவனு மிரட்டுனான் வந்த கோவத்துல தூக்கிப் போட்டு மிதி மிதினு மிதிக்க ஆரம்பித்தேன்,உடனே அந்த பிக்காலிப் பிசாசு உன் பையன் சங்க அறுத்துட்டு வந்து உன்ன வெச்சுகறனு கிளம்பிட்டான்......
ஒரு நமட்டுச் சிரிப்புடன் “அப்பாட நம்ம தலயே இவன்கிட்ட அடிவாங்கிருக்கா அப்ப நமக்கு ஒன்னும் அவமானம் இல்ல” என மனசுக்குள் நினைத்துக் கொண்டது பேய்.
“நான் உடனே ஒரு தாயத்து மந்திரிச்சு என் பையனோட அரைஞான் கயித்துல கட்டிட்டன்,உடனே கொள்ளிவாய் பிசாசோட மூஞ்சி குவார்ட்டர் அடிச்ச குரங்கு மாதிரி மாறிப் போச்சு,அத பாத்து நான் சிரிச்சுக்கிட்டே இருக்கும்போது உன் புள்ளயோட அரைஞான் கயித்த அறுத்து உன்ன அழ வெச்சு சாகடிக்கறேன்,அதுவர உன்ன நிம்மதியா தூங்கவும் உடாம பண்ணல என் பேரு கொள்ளிவாய் பிசாசு இல்லடானுட்டு போயிருச்சு,அப்புறம் ஒரு 10 வருவம் ராத்திரி ராத்திரி வந்து தொல்ல பண்ணிப் பாத்துச்சு அதுனால முடியாம போய் இப்ப கடைசி 15 வருசமா உன்ன மாதிரி அப்ரசன்டிகள அனுப்பிக்கிட்டு இருக்கு.சரி எனக்கு போதை அதிகமாயிருச்சு நீ பொழைச்சு போ குட் நைட்டு” என மட்டையானான் கோவிந்தன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு 11.30
சென்னையிலுள்ள ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தின் ஆய் போகும் அறையில் அரை நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தான் கோ.பரதன்,அவனுக்கு கீழே முட்டி போட்டு அமர்ந்து இருந்த அந்த வெள்ளைக்கார பைங்கிளி அவன் இடுப்பிலிருந்த அரைஞான் கயிற்றை ஒரு க்ரிப்புக்காக கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தாள்.
ஆனந்த மயக்கத்தில் சற்றே நிலை தடுமாறிய பரதன் அப்படியே பின்னோக்கிச் சரிய அரைஞான் கயிறு காதலியின் கையோடு போனது.அதுவரை மேற்கூரையில் காத்துக் கொண்டிருந்த கொள்ளிவாய் பிசாசு அப்படியே அவனை அலாக்க தூக்கி மல்லாக்க போட்டுக் கொண்டு சென்னைக்கு மிக அருகில் உள்ள அழகிய கிராமத்தை நோக்கி விரைந்தது.
அழகிய கிராமம் கோவிந்தனின் வீடு நேரம் இரவு 11.45
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........கோவிந்தா வெளிய வாடா ஆக்ரோசமாக கத்தியது பிசாசு
வாடா டம்மி பிசாசு என் பையன ஒருவழியா தூக்கிட்ட போல...ஏண்டா பிச்சைகார பிசாசே அவன பேண்டக் கூட முழுசா போட உடாமயா தூக்குவ....பரதா பேண்ட போட்டுக்கோ பயப்படாத அப்பா இருக்கன்.....டேய் முடிஞ்சா என் பையன என் கண்ணு முன்னாடி கொல்றா பாக்கலாம் என்றபடியே குவார்ட்டரை ராவாக குடித்தான் கோவிந்தன்.
வெறியான கொள்ளிவாய் பிசாசு பரதனை கொல்ல கடுமையாக முயற்சி செய்து ஒண்ணும் நடக்காமல் போகவே பேந்த பேந்த முழித்தபடியே கோவிந்தனை பார்த்தது.அப்பொழுது கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
புல் போதையான கோவிந்தன் காதல் கொண்டேன் தனுஷை போல ஒரு கொடூரப் பார்வை பார்த்து விட்டு ஆட ஆரம்பித்தான்
கொள்ளி....... கொள்ளி.......நீ........டம்மி........டம்மி........
ஆடி முடித்து பிசாசை கொலவெறியுடன் அடித்துத் துவைத்தான்.
எப்டி.. எப்டி இது சாத்தியம் என பிசாசு முனகலுடன் கேட்க கோவிந்தன் மீண்டும் ஆடிக் கொண்டே கூற ஆரம்பித்தான்.
“நான் செத்து ஒரு நாள் ஆச்சுடா செத்த உடனே என்கிட்ட உதை வாங்குன உன் அப்ரசன்டி பேய்கள் எல்லாம் சேர்ந்து என்னை தலைவன் ஆக்கிருச்சு நான் தலைவன் ஆன உடனே உன்னோட எல்லாப் பவரையும் நான் புடுங்கிட்டேன் இப்ப நீ வெறும் டம்மி மேல வா உனக்கு 1000 வருச கடுங்காவல் தண்டனை காத்துக்கிட்டு இருக்கு” என்று கூறி பிசாசை தூக்கிக் கொண்டு பரதனை வாழ்த்தி விட்டு மேலே பறக்க ஆரம்பித்தான் கோடங்கி கோவிந்தன்.
மெல்ல வீட்டிற்குள் நுழைந்த பரதன் தன் தந்தையின் உடலை பார்த்து கதறி அழ ஆரம்பிக்கும்போது அவனது கைபேசி “ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற ரிங்டோனில் ரிங்காக ஆரம்பித்தது.

அப்பாவின் பாசம் - சிறுகதை - அகிலன் தேசிங்கு

சிறுகதைப் போட்டி எண் - 2

எழுதியவர் - அகிலன் தேசிங்கு


'இப்பதான் வர்றியடா " குரல் கேட்டு திரும்பினான் சதிஸ்.
மங்கிய வெளிச்சத்தில் சதிஷின் அப்பா கண்ணன் நின்று கொண்டிருந்தார் .
"ஆமாப்பா , ஊருக்குள்ள வர கடைசி வண்டியை விட்டுடேன்.
கொஞ்சம் தூரம் தானனு இந்த குறுக்கு வழியா நடந்து வந்தேன். " சொல்லிவிட்டு
கடிகாரத்தை பார்த்தான் மணி பதினொன்றை தாண்டி காட்டிக்ககொண்டிருந்தது
"எப்படிப்பா இருக்க "
" ம்நல்லா இருக்கேன் "
"உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டேன் "
"ம்ம்ம்".
இருவரும் முன்னே நடக்க நினைவுகள் பின்னோக்கி சென்றது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ..
அகல்யா ..!
சதிஷ்ற்கு இந்த பெயரே அகல்யாவை காதலிக்க போதுமாயிருந்தது.
சாதி மதம் எதுவும் பார்க்கவில்லை.
அவனை பொருத்த வரை இது " தெய்வீகக் காதல்".
அதற்கு இதெல்லாம் தேவையில்லை என்று நம்பினான்.
இந்த தெய்வீகக் காதல் பற்றியெல்லாம் வீட்டிற்கு புரியவில்லை.
வீடா!, காதலா!
என்ற நிலையில் அவன் இரண்டாவதை தேர்ந்தெடுத்தான்.
இதோ ஐந்து ஆண்டுகள் ஆயிற்று.
பெங்களுரில் செட்டிலாகி இப்போது தான் அப்பாவை பார்க்க வந்து கொண்டிருக்கிறான்.
குளிர்ந்த காற்று மெதுவாய் வீசிக் கொண்டிருந்தது. அருகில் உள்ள சுடுகாட்டில் சிதை ஒன்று எரிந்து கொண்டிருந்தது
நினைவுகளில் இருந்து விடுபட்டவனாய் திரும்பி பார்த்தான்.
இருளில் அவர் முகம் சரியாய் தெரியவில்லை.
"இப்பதான் அப்பன் நினைப்பு வந்துச்சோ "
"-----------"
" உன்ன மாதிரி எங்களால முழுசா அத்துவிட முடியல "
" ------"
" உன்ன பார்த்ததுக்கு அப்பறம் தான் என் கட்ட வேகும்னு இருக்கு"
இதை சொன்னபோது உடைந்ததிருந்தது போல் தோன்றியது .
" ------- "
குற்றவுணர்ச்சியில் சதிஷிற்கு பேச்சே வரவில்லை
பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் வந்து கொணடிருந்தான்.
தன் தவறுகளுக்கு பரிகாரமாய் அப்பாவை கூடவே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அதன் பிறகு அவர் பேசவில்லை .
வீட்டுக்கு வந்ததும் கூட்டமாய் இருந்தது.
சித்தப்பா தான் சதிஷை முதலில் பார்த்தது.
" என்ன சதிஷ் இப்ப வர ? "
" ஏன் என்னாச்சு "
"உனக்கு தெரியதா ? "
" என்ன சித்தப்பா சொல்றிங்க ஒன்னும் புரியல "
உன்ன பார்க்க முடியலயேங்கற ஏக்கத்துல உங்கப்பா போய் சேர்ந்துட்டார்.
அஞ்சு வருசமா வரல ,
இனிமேயும் நீ வர மாட்டேனு தான் கொஞச நேரத்துக்கு முன்னாடி கொண்டு போய் வர்ற வழில இருக்க சுடுகாட்டுல எரிச்சோம்." என்றார்.
அவன் வாசலை போய் பார்த்தான். நிழல உருவம் ஒன்று வந்த பாதையில் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

கதவுகள் - சிறுகதை - ராகவன்



சிறுகதைப் போட்டி எண்-2

எழுதியவர் - ராகவன்

கதவுகள்
"ஹலோ .. அட்மின் ? கார்த்திக் மணி?"
"வணக்கம் லவ்வரு .. நீங்க எழுதலியா சிறுகதை?"
"எனக்கு இந்த பேயில நம்பிக்கை கிடையாது ப்ரோ .. ஆனா பயம் மட்டும் உண்டு .. எதுக்கு வம்பு"
"சும்மா எழுதுங்க ப்ரோ"
"நமக்கு காமிக்ஸ் விமர்சனங்கள் தான் வரும் - அதுவும் கெட்ட வார்த்தை கலந்து .. என்னத்த கதை எழுதறது .."
"இப்போ இங்க என்ன சுஜாதாவும், கல்கியுமா எழுதுறாங்க? சும்மா குதிங்க ப்ரோ"
"இந்த ரூல்ஸ்ல கொஞ்சம் டவுட் ... chat பண்ணுவோமா ?"
"சரி தலைவா சொல்லுங்க .."
.......
.......
"சரி கார்த்திக் டைம் ஆச்சு. தூங்கப் போறேன் காலேல ட்ரை பண்றேன் .... C U"
 "
---
சில மணிநேர அவசர உறக்கத்துக்கு பின் நடுநிசியில் விழித்தெழும் காமிக் லவர் மறுபடியும் facebook கதவுகள் க்ரூப்பில் ....
"அட கார்த்திக் இன்னும் தூங்கலியா?"
"இல்ல ப்ரோ .. கொஞ்சம் வேலை இருந்துது"
"சரி யோசிச்சு பார்த்தேன் .. பேய் என்பது எப்டி பேசிக்கா உருவாகுது ..."
"நிறைவேறாத ஆசைகளுடன் மரணிக்கும் ஆத்மாக்கள் பேயா வரும் ..."
"அது சரி - விட்டல்லாச்சார்யா சமாசாரம் .. எப்டி ஒரு கதைக்குள்ள பேய நோழைக்கிறது?"
"நாம நோழைக்க வேணாம் லவர்ஜீ. அதுவே நோழைஞ்சுக்கும்  "
"ஓகே கார்த்திக் .. இன்னும் சில points ..."
லொட் லொட்டென்று டைப் அடித்த படி காமிக் லவர் தூங்கிப் போகிறான் !
---
பழைய சூப்பர் ஸ்டாரின் புதிய டப்பா படத்தில் வரும் டுபுக்கு பாடல் ஒலிக்க கார்த்திக் தனது செல் போனை எடுக்கிறான்.
"ஹலோ கார்த்திக் .. நான் காமிக் லவர் .. என்ன குரூப்பில ஒரே confusion?"
"எனக்கும் தெரில காமிக்கு .. உங்களோட பேசிக்கிட்டே அப்டியே தூங்கிட்டேனா ... காலைல எழுந்து குரூப்ப பார்த்தால் இப்டி ஒரு கலவரம்"
"நானும் அப்டியே கண்ணசந்துட்டேன் ... அறிவிச்சு மூணு நாளுதான் ஆகியிருக்கு ... ஒரு மாசம் டைம் இருக்கு .. அதுக்குள்ளே முடிவு சொல்லியாச்சு? அதுவும் நான் எழுதின கதைக்கு ??!!! எப்போ எழுதினேன்னு புரீலையே - உங்களிடம் நேற்று கேள்விகள் தானே கேட்டுக்கிட்டிருந்தேன் - நைட்டு"
"எனக்கும் புரீல லவ்வரு .. உங்களுக்கு பதில லொட்டு லொட்டுன்னு டைப் பண்ணிக்கிடிருந்தேன் .. முழிச்சுப் பார்த்தால் கலவரம் - நீங்க எழுதின கதைய தேர்ந்தெடுத்து அதுக்குள்ள சிறந்த கதையா நானே அறிவிச்சிருக்கேன் .. எப்படி?"
ராகவன் விழித்துக்கொண்டே பல் துலக்கச் சென்றான். கணிணி மானிட்டரில் ஒரு wordpad பைல் திறந்திருந்தது. அவன் நேற்று கார்த்திக்குடன் பேசிய சில குறிப்புக்களை எழுதியிருந்தான். ஒன்று HIGHLIGHT செய்யப்பட்டிருந்தது ...
"நிறைவேறாத ஆசைகளுடன் மரணிக்கும் ஆத்மாக்கள் ..... "
முற்றும்

Friday, December 26, 2014

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 3

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 3

மக்கள் பிரபலம் திரு

முன்பேட்டிச் சுருக்கம்:ஒரு கண்றாவிப் பேயை,ஒரு கழிச்சடை நிருபர் பேட்டி என்ற பெயரில் குப்புறப் போட்டு..கழிம்பு தடவிக் கொண்டிருக்கிறார்.. இனி மனச்சாட்சியே இல்லாமல் மல்லாக்கப் போட்டு மருந்து தடவுவார்..)
நேயர்களே.. இடைவேளையில் எல்லோரும் நல்லா மூனுவேளை சாப்பிட்டு இரண்டு வேளை ஆயி போனீங்களா..? சரி இப்ப நம்ம பேய் சாரோட பேட்டியைத்தொடரலாம்..
"பேய் சார் உங்க ஆண் பேய்களோட சோகத்தைக் கேட்கும்போது எனக்கே முட்டுது அழுகை..எப்படிசார் தாங்கிக்கிறீஙக..?"
"முருக்கைக்காய் சாப்டுற உன்னாலயே தாங்கிக்க முடியலயே..முருக்கைமரத்துலயே குடியிருக்கிற எங்கள நினைச்சுப்பாரு..(அழுகிறார்..சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு..ஒரு கேள்வியுடன் நிமிர்ந்தார்..)
"ஆமா நீ உண்னையிலயே புலனாய்வுப் பத்திரிக்கையில இருந்துதான் வரியா..?கேள்வி எல்லாம் எதோ அஜால் குஜால் புக் மாதிரி இருக்கு..ஐடியக் காட்டு"
"ஸாரி பேய் சார்..இனி கேட்டப் போற கேள்விகள் ஹாட்டா இருக்கும்..அதான் உங்கள கொஞ்சப் ஃப்ரிகூல் பண்ணுனேன்.."என்றபடி பைக்குள் இருந்து சில பேப்பர்களை எடுத்து வைத்தேன்..
"பேய் சார்..நீங்க நல்ல பேயா இருந்தாலும்..பொதுவா பேய்கள் ரொம்ப அட்ராசிட்டிஸ் பண்ணுதுகளே.."
"எவன் சொன்னான்..?" என்றார் பேய் கோபத்துடன்..
"யாரும் சொல்லள..இந்த பேய்க் கமிஷன் ரிப்போர்ட் சொல்லுது.."
"யோவ் பன்னாட..சொல்றவன் ஆயிரம் சொல்லாம்..எங்க நிலமையில இருந்து பார்த்தா தான் தெரியும்"
"அய்யா நான் வேணும்னா ஒரு நாள் பேயா இருந்து பார்க்கட்டுமா சார்.."என்றேன் அவரை மடக்கிய தோரணையுடன்.
"ஓங்கி அடிச்சேன் மிச்சம் இருக்குற எல்லா நாளும் நீ பேயாத்தான் இருக்கனும்..மூடிட்டு வேற கேள்வி
கேளு.."
"ஸாரி பேயி..உங்களுக்கு இலக்கிய ஆர்வம் உண்டா..?"
"அந்த கருமாந்துற ஆர்வத்துலதான் நான் பேயாவே
ஆனேன்.." பேய்க்கு
கண்கலங்குகிறது.
"கொஞ்சம் விவரமா சொல்லுங்க.."
"நான் சாகுறதுக் முன்னாடி... எங்கப்பா ஒரு பச்சிலப்புடுங்கியா இருந்தாரு..நானும் அவரமாதிரியே ஆயிறக் கூடாதுனு சிகப்பு இலை விளையிர பக்கத்து ஊருக்கு எனனை அனுப்பி வச்சாரு..அங்கதான் அந்த நாதாரிக் கூட்டத்தை சந்திச்சேன்..
ஒரு செவத்த மூதிதான் என்னை அவர்களிடம் அறிமுகப் படுத்தி வச்சான்..மாப்ளே இவங்கெல்லாம் தீவிர இலக்கிய வட்டத்துல இயங்குபவர்கள்..இவங்ககூட இருந்தா உன்னோட (சின்னவயசு கனவான) கதை எழுதும் திறமைக்கு விளக்கேத்தி வைப்பாங்கன்னு சொன்னான்..ஆனா அப்பத் தெரியல..அவங்கெல்லாம் ஒன்னா கூடி ஒப்பாரி பாடி கொள்ளி வைப்பாங்கனு.." என்று நிறுத்திய பேய் மறுபடியும் ஒரு கட்டிங்கைப் போட்டது..
மீண்டும் பேசத் தொடங்கியது...."நீங்க வாங்க பாஸ்..அடுத்த வாரம் கீதா ஹால்ல மூனுநாள் நம்ம 'பட்டை தீட்டும் பட்டறை' நடக்குது..பெரிய எழுத்து ஆளுமைகள் எல்லாம் வராங்க..நிச்சயம் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்..வரும்போது ஒரு ரெண்டாயிரம் பணமும்..ஒரு கேஸ் ராயல் சேலஞ்சும் கொண்டு வந்திடுங்க.என்றார்கள் அந்த நாதாரிகள்..அப்பவே நான் சுதாரிச்சிருனும்..ஆனா இந்த பாழாய் போன ஆர்வம் கண்ண மறைச்சிருச்சு... கண்ட இடத்தல லொல்பட்டு அடுத்த வாரம் அவங்க சொன்னவற்றை வாங்கிட்டுப் போனேன்..அங்கே.." என்று நிறுத்திய பேய்..
"எப்படியும் நீ சொல்லாத்தான் போற..நானே சொல்லிறேன்..நேயர்களே..

stay tune..."

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 2

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 2

மக்கள் பிரபலம் திரு

நேயர்களே..நம்ம அண்ணன் பேயுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்..
"அப்புறம்..என்னாச்சு பேய் சார்.."
"வீட்டுக்கு வந்து போன்ல திட்டலாம்னு கால் போட்டேன்..மனுஷனாயா அவன்..கண்ட கணட கெட்ட வார்தைல திட்டி,அதை காலர் டியூனா வச்சிருக்கான்..பாவி பய.. என் 25 வருச மனுஷ வாழ்க்கைலயும்,5 வருஷ பேய் வாழ்க்கையும் அப்படிபட்ட வார்த்தைகளை கேட்டதே இல்லை..சை.."
"பேயான நீங்களே இப்படி பயப்பட்டா...எங்க நிலைமையை நினைச்சுப் பாருங்க சார்.."
"இருக்கட்டும்.. இன்னொரு படத்துக்கு போஸ்டர் ஒட்ட நடுராத்தில வராமலா இருப்பான்..அப்ப வச்சுக்கிறேன.."
"கூல் சார்..அப்புறம்..நீங்கள் எல்லாம் எப்படி கால்கள் இல்லாம நடக்குறீங்க..?"
"மொதல்ல எல்லாம் கால்லதான் நடந்துட்டு இருந்தோம்..ஒரு தடவை ஒரு நொண்டிப் பேயப் பாத்து மனுஷங்க ரொம்ப பயப்பட ஆரபிச்சாங்க.. சரினு சங்கத்த கூட்டி முடிவு பண்ணோம்.."
சிறிது இடைவேளியில் பேய் ஒரு கட்டிங்கப் போட்டார்..
"...அப்ப இருந்து கமல் மாதிரி கால்கள கட்டிட்டு சுத்திட்டு இருக்கோம்..உங்கள பயமுறுத்த நாங்க படற பாடு இருக்கே..அய்யய்ய்யோ.."
"ஏன் நீங்கெல்லாம் நைட் பண்ணென்டு மணிக்கே வர்றீங்க.."
"அலாரம் வச்சு நாங்கென்ன ஆபிஸூக்கா போறோம்..வெள்கெண்ண மாதிரி பேசாதடா..நீங்கள் எங்களோட ஒன்னா சேந்து பதிணொன்னு ஐம்பதஞ்சு வரை சரக்கடிச்சுட்டு சரியா பண்ணென்டு மணிக்கு பயப்படறீங்க..அதுக்கு நாங்க என்ன பன்றது.."
"முக்கியமான ஒரு கேள்வி நீங்கள் 'அந்த' விசயத்துல எப்படி..?"
"அடக் கேனப் பயலுகளா..பேயக்கூட விடமாட்டீங்களா..
சரி சொல்றேன்..பேய்கள் சமூகத்தில் கல்யாணம் என்பது கிடையாது..living together தான்..ஆனா இதுல ஆண் பேய்கள் தான் பாவம்..சில பெண் பேய்கள் 'வர்ற ஆமாவாசைக்குள்ள' அப்படீனு ஏதாவது பிட்டப் போட்டு மேட்டர முடிச்சுக்கும்..ஆண் பேய்களுக்கு கற்பழிப்புதான் ஒரே வழி..சில நேரம் கை.."
உடனே நான் பதறி "பேயி..சென்சார்..சென்சார்.."என்று கத்தினேன்..
"அட ஏன் பதறுர..கைல சிக்குற பேய்கள லவ் பண்ன வேண்டியது தான்னு சொல்ல வந்தேன்"
சரி நேயர்களே..
மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்டா..என்று தலையில் அடித்தபடி பேய் முறுக்கை கையில் எடுத்தது..
..stay tune..

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 1

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 1


மதியம் 12 மணி, பேயை பேட்டி எடுக்கச் சென்றேன்..
பேய் பெப்பரப்பேவென தூங்கிக்கொண்டிருந்து,நான் அதன் அருகில் சென்று..பேய் சார் என்றேன்..அது பேயப் பாத்த மாதிரி அலறிக்கொண்டு எழுந்தது..பேயிக்கே பெப்பே காட்டிய என் முக அழகை வியந்து கொண்டே"உங்கள பேட்டி எடுக்க வந்துருக்கேன்"னு சொன்னேன்..
"உன்னோட போட்டிய எடுக்கறக்குள்ள ஒழுங்கா ஓடிப் போயிரு..அவனவன் நைட் டூட்டி பாத்துட்டு அலுப்பா படுத்திருக்கான்..பேட்டியாம் பேட்டி.."
"நீங்க அப்படி சொல்லக்கூடாது..எனக்கு எடிட்டர் கிட்ட ஏத்து விழுகும்..தயவு செய்து இரக்கம் காட்டுங்க பேயி சார்.."
"டேய்..உங்க எடிட்டரையும் சேத்து ரெண்டு காட்டு காட்டிடுவேன்...ஓடிடு.."
"இந்தாங்க பேயி சார்..உங்களுக்காக முக்கா புல்லும்..முறுக்குப் பாக்கெட்டும் வாங்கிட்டு வந்துருக்கேன்..இதை வச்சுகிட்டு ஏதாவது பாத்து பண்ணுங்க சார்.." என்றபடி அதை எடுத்து வைத்தேன்..
பாயைப் பாத்த நாயாக பேயி வாய் நிறைய பல்லானது..
"ஓ.கே..எங்கே மிச்சக் குவாட்டர்..?"
"பேயப் பாக்கப் போறமே தைரியத்துக் இருக்கட்டுமனு அதை நான் அடிச்சுட்டேன் பேய் சார்.."
"சரி சரி கேளு.."
குறலு ஆம்பள மாதிரியும்,காஸ்ட்யூம் பெண் மாதிரியும் இருந்ததால்..
"நீங்க ஆம்பளப் பேயா.?
இல்ல பொம்பளப் பேயா..?"
என்று கேட்டேன்..
உடனே பேய் கழட்டிக் காட்டியது..விக்கைத்தான்..
"எங்கப்பா.. ஆம்பள பேயை மதிக்கறாங்க..அதான் பொம்பள வேஷம் போட்டு சுத்திட்டு இருக்கேன்..அப்பப்ப டராகுலா,டூவ்லைட் னு படங்கள் வந்து நம்ம மானத்தக் காப்பாத்திட்டு இருக்கு.."
"ஓ..சினிமாவெல்லாம் பாப்பிங்களா..!"
"எப்பவாது பாப்பேன்."
"சமீபத்தில் என்ன படம் பாத்தீங்க..?"
"போன வாரம் கூட லிங்கானு ஒரு படம் போனேன்..தியேட்டர் தனியா ஒக்காந்து பாக்க எனக்கே பயமா இருந்துச்சு..பாதிலயே ஓடியாந்துட்டேன்..முந்தாநேத்து நம்ம படமாச்சேனு பிசாசுக்குப் போனேன்..படமா தம்பி எடுத்திருக்காங்க..பேய நாய்குட்டி மாதிரி காட்டிருக்காங்க..வந்த கோவத்துக்கு அந்த மிஷ்கின செவுல்ல அறையலாம்னு அவர் ஆபிஸுக்குப் போனேன்..அந்த ஆளு ஒரு பையனப்பிடுச்சு பேய் கத்து கத்திட்டு இருந்தாரு..மிரணடு திரும்பிட்டேன்.."
சரி நேயர்களே ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு மீண்டும் பேயின் பேட்டி தொடரும் என்றேன்..
உடனே பேய்" யோவ்..என்னைய்யா பேப்பருக்கெல்லாம் பிரேக் விடுறீங்க.."
"பேய் சார்..நான் ராஜ் செய்திப் பத்திரிக்கை..அப்படித்தான் விடுவோம்.."
.....stay tune...

Wednesday, December 24, 2014

வரலாற்றில் நாம் - சரித்திரத் தொடர் - 4


வரலாற்றில் நாம்: (நாடகம்)
அத்தியாயம் நான்கு


எழுதுபவர் : பால கணேசன்


இடம் - மராட்டியர்கள் கூடாரம் இருக்கும் இடம்
பங்கேற்போர்- தேசிங்கு கூஜா மற்றும் தளபதி

மராட்டிய இளவரசனாக தேசிங்கு கூஜா : தளபதியாரே அப்படி என்னதான் இந்த மதுரையின் சிறப்பு? ஏக் தொ தீன் சார் என வரிசைப்படுத்தி கூறுங்கள்.

மராட்டியத் தளாபதியாக ஷாஜிச் சாமி : ஒன்றா இரண்டா? முதலில் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகத்தைப் பற்றி கூறுகிறேன். காடை, கவ்தாரி, கோழி, கொக்கு, பூனை, ஆந்தை, ஆடு, மாடு, பன்றி,பருந்து, முயல், கயல் இடையில் கரப்பான், பல்லி என எல்லா அசைவ உணவும் கிடைக்கும் இளவரசே..

தேசிங்கு : உம்மை தளபதியாக நியமித்தது என் தலைவிதி.. கூறுகெட்ட கூமுட்டையே.. குண்டி கழுவா கொசு முட்டையே.. நான் தின்பதற்கு கேட்கவில்லை. தினவெடுத்த என் தோள்களுக்கு அங்கே தீர்க்கமாக என்ன உண்டு என சொல்லும்..

ஷாஜி : அப்படிக் கேட்டீர்களா இளவலே! முதலில் மதுரை மீனாக்ஷி அம்மன் மந்திர். நான்கு வாசல் கொண்டது. நான்கின் முடிவிலும் தங்கம். ஆனால் ஒருவாசல் போனால் மீண்டும் அதே வாசல் திரும்பி வர வழி தெரியாமல் போகும். ஆயிரங்கால் மண்டப். பஹூத் அச்சா.. அங்கே ஒரு தூண் இருக்கிறது. நீங்கள் அதை தட்டினால் தானாகவே இன்னிசை எழுப்பும். நீங்கள் இரவு நேரங்களில் யாழ் மீட்டுகிறேன் என்று ரம்பம் போட்டு அறுப்பீர்களே.. நினைவிருக்கிறதா? அதை விட ஆனந்தமாய் இருக்கும். அந்த இடம் மிகவும் இருட்டாக இருப்பதால் மதுரையின் மக்கள் தொகை பெருக எந்த இடமும் காரணமாக இருக்கிறதாய் ஒற்றர்கள் சொன்னார்கள் இளவரசே!

கூஜா : சரி..சரி.. அந்த இடத்தில் இருப்பதிலேயே இருட்டான இடத்தை தேர்ந்தெடுத்து வையும்.. எமக்கு அங்கே சில ரகசிய அரசாங்க பணிகள் இருக்கிறது.

தளபதி : (உன் வண்டவாளம் எனக்கு தெரியுண்டா.. மதுரைப் பொண்ணுங்க தாவணியை ஓவியத்துல பார்த்துப்புட்டுதான நீ இந்த போருக்கு நான் போறேன் நான் போறேன்னு உங்கப்பன்கிட்ட குதிச்ச? அப்பவே தெரியுண்டா..) அப்படியே ஆகட்டும் இளவலே..

"மதுரை மரிக்கொழுந்து வாசம்.. என் ராசாத்தி உன்னுடைய நேசம்.." என்கிற பாடலை முனுமுனுத்தவாறே இளவரசன் தன கூடாரத்துக்குள் செல்கிறார்.)


இடம் - கருணாவின் வீடு.
பங்கேற்பு - நங்கை, கருணா, பால கணேசனார்

நங்கை : நீங்கள் வழக்கமாய் என்ன வேடம் போட்டு எதிரிகளை ஏமாற்றுவீர்கள் நாதரே?

கருணா : வண்டிக்காரன் வேடம். ஏன் நீ 23-ஆம் புலிகேசி வரலாறு படித்ததில்லையா? இருப்பதிலேயே சிறந்த வேஷம் அதுதான். அடி கொஞ்சம் பலமாகத்தான் இருக்கும். ஆனால் தகவல் சேகரிப்பதற்கு அது மிகமுக்கியம் என் கண்ணே!

நங்கை : என்னவோ போங்கள்.. அன்று உங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும்போது உங்கள் முதுகில் இனிமேலும் அடிவிழ இடமே இல்லாததை கவனித்தேன். கவனமாக இருங்கள் அத்தான். சாமான்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று உங்கள் வண்டியில் கூட எழுதியிருக்கிறீர்கள்.

அப்போது கதவை திறந்து கொண்டு பாலகனேசனார் உள்ளே வருகிறார்.

பா.க : என்ன கருணா காலையிலேயே கொஞ்சலா?

கருணா : அப்படியெல்லாம் இல்லை அய்யா.. தங்கள் வரவு என்னை அச்சமூட்டுகிறது. முக்கியமான சேதி இல்லாமல் தாங்கள் இப்படி வந்ததே இல்லையே..

பா.க : அம்மா நங்கை.. நீ சற்று உள்ளே போ..நாங்கள் ராஜாங்க விஷயமாக அளவளாவ வேண்டும். (கருணாவிடம் திரும்பி..) கருணா.. கோசல நாடு வழியாகத்தானே போனாய்?

கருணா : ஆம் அய்யா.. நீங்கள் அப்படித்தானே போகச் சொன்னீர்கள்.. தங்கள் பேச்சை மீறுவேனா?

பா.க : அப்படியென்றால் "அது" கிடைத்ததுதானே?

கருணா : ஆம் அய்யா.. வேண்டும் அளவுக்கு கிடைத்தது. ஆனால்...

பா.க : என்ன இழுக்கிறாய்? எதுவும் பிரச்சினையா?

கருணா : வரும் வழியில் மராட்டிய ஒற்றர்களோடு சேர்ந்து அவர்கள் ரகசியத்தை தெரிந்துகொள்ள வேண்டி சோமபானம் அருந்தியபோது சரக்கு காலியானதால் "அதை" நான் வைத்திருப்பதை அவர்கள் அறிந்து வலுக்கட்டாயமாக எடுத்து முடித்துவிட்டார்கள் அய்யா.. இதை தங்களிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல்தான் நான் தங்களை சந்திக்க வரவேயில்லை.

பா.க : என்ன தீர்ந்துவிட்டதா? எனக்காக நீ கொணர்ந்த வரியில்லா கோசல நாட்டு சோம பானத்தை குடித்தே தீர்த்த மராட்டிய மடையர்களுக்கு என் வாளால் பதிலுரைக்கிறேன். இது சத்தியம்.


தொடரும்...

மேலதிக விவரங்களுக்கு : கதவுகள்

வரலாற்றில் நாம் - சரித்திரத் தொடர் - 3


வரலாற்றில் நாம்: (நாடகம்)
அத்தியாயம் மூன்று



தேசிங்கு கூஜா : வீரர்களே நமது மாமன்னர் ஷரத் சப்ஜியின் கனவு நனவாக வேண்டும், மதுரை மீண்டும் நம் கட்டுக்குள் வர வேண்டும், எனது பாட்டனாரின் பாட்டனார் ஆளு சப்ஜி மதுரையை கப்பம் கட்ட வைத்தவர் அவர் வழி வந்த நமது மாமன்னரின் வேண்டுகோளுக்கிணங்க தளபதி ஷாஜிச் சாமியோடு இங்கு முகாமிட்டுள்ளோம். இன்னும் மூணு வார காலத்தில் மீனாட்சி ஆளும் நகரம் நம் கட்டுக்குள் வர வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

வீரர்கள் கோரஸாக : செய்வோம்... செய்வோம்....

பால கணேசரின் இல்லம். மதியாலோசனை.

பங்கேற்பு : அகண்ட மணி, போர்ப் பிரபலம், சிவ மைந்தன், பால கணேசர்

பா.க : இந்தப்போர் நமக்கு வாழ்வா சாவா நிலை, மராட்டியர்களை நிரந்தரமாக நாம் விரட்டியடிக்க வேண்டும், மதுரை மராட்டியனின் நிரந்தர பயமாக வேண்டும்

அ.ம : ஆம் கணேசரே, என் ரத்தம் கொதிக்கிறது, புஜங்கள் துடிக்கிறது, எதிரியின் தலயை கொய்யும் வரை ஓயாது என் ஆத்திரம்

போ.பி.தி : (சிவ மைந்தனிடம் மெதுவாக) இவன் ஒருத்தன், இந்த நிலையிலும் நகைச்சுவையா, உயிர் பிரச்சினையப்பா இது, ஆனால் ஒன்று நன்கு பயிற்சி செய்துள்ளான் இவ்வாறு கொந்தளிக்க, அவன் கண்ணாடி முன் நின்று பிதற்றும் போதே எனக்கு மெல்லிய சந்தேகம் வந்தது. ஏனையா இதற்கெல்லாமா பயிற்சி?

சி.மை : கணேசரே உங்கள் வியூகம் என்ன, மராட்டியர்கள் மதுரைக்கு தெற்கே நூற்றிருபது கல் தொலைவில் முகாமிட்டுருக்கிறார்களாம்.

பா.க : என் ஒற்றன் கருணா இந்தத் தகவலையும் படை விவரத்தையும் தெரிவித்தான், நாம் குதிரைப் படையுடன் சென்று தாக்குவதே நமக்கு அனுகூலம்.

போ.பி.தி : என்ன குதிரையா? அது மட்டும் வேண்டாம் கணேசரே நாம் தேரில் சென்று தாக்குவோம், ஒரு இதுவாய் இருக்கும்.

அ.ம : அடேய் வெதர் வீங்கி நிறுத்து உன் சாகசத்தை, உன்னால் முடியாதென்பது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம் எங்களுக்குத் தெரியாதென்று நினைத்தாயா?

சி.மை : பொறுமை அகண்டவரே

போ.பி.தி : விடுமையா சிவ மைந்தா, உமக்கும் தெரிந்துவிட்டதா அகண்டவா?

பா.க : சரி விஷயத்திற்கு வாருங்கள், நமது வியூகம் என்ன?

போ.பி.தி : தளபதியாரே நான் சொல்வதை பொறுமையுடன் கேளுங்கள், நான் வீரத்தில் சற்று சளைத்தவன் தான் ஆனால் வியூகத்தில் மதி யூகத்தில் இங்கிருக்கும் அனைவரையும் விட உயர்ந்தவன், இல்லாது போனால் இத்தனை போர்க்களம் கண்ட பிறகும் சிறு காயம் கூட கிஞ்சித்தும் இல்லாமலிருப்பது சாத்தியமா ? யோசியுங்கள்.
அ.ம: பிறகு அந்த வெதரடி வேந்தே என்ற பட்டம் எவ்வாறு வந்தது ஈனப் பயலே?

போ.பி.தி. அய்யோ சற்று பொறுமைய்யா அகண்டவா, பால கணேசரே, என் யோசனைக்குச் சற்று செவி மடுங்கள்.

பா.க : என்ன உன் யோசனை?

போ.பி.தி : அது புத்திசாலிகளுக்கு அழகு. தற்பொழுது மராட்டியர்கள் மடுரைக்குத் தெற்கே நூற்றிருபது மைல் தொலைவில் உள்ளார்கள் அல்லவா? அங்கிருந்து அவர்களை வடக்கே நகர்த்த வேண்டும், நாம் அறுபது மைல் தொலைவில் அவர்களை அலைக்கழிப்போம்.

பா.க : பிறகு

போ.பி.தி : அங்கிருந்து அவர்களை வட மேற்கே ஒரு இருநூறு மைல் தொலைவுக்கு இழுத்துச் செல்வோம்

அ.ம : அதனால் என்ன பயன்?

போ.பி.தி : இது கேள்வி, இன்னும் ஒரு மூன்றே மூன்று மைல் மட்டும்தான், மராட்டிய மாநிலம் வந்துவிடும், சொந்த ஊரைப் பார்த்த மகிழ்ச்சியில் போர் வீரர்கள் சொந்த பந்தங்களைப் பார்க்கப் போய் விடுவார்கள். ஹா ஹா. போரிடாமலே வெற்றி. அது வரை நான் இங்கு தங்கியிருந்து மதுரயை நன்கு நிர்வாகம் செய்வேன், ஏதேனும் போர் யோசனை வேண்டுமானால் தூதனிடம் சொல்லி அனுப்புங்கள். என்ன சொல்கிறீர்கள்???

நாயக்க வீரன் செய்ததை அதே காரியத்தை அதே இடத்தில் பால கணேசனார் மீண்டும் செய்தார்.

தொடரும்...

மேலதிக விவரங்களுக்கு : கதவுகள்

Tuesday, December 23, 2014

வரலாற்றில் நாம் - சரித்திரத் தொடர் - 2


வரலாற்றில் நாம்: (நாடகம்)
அத்தியாயம் இரண்டு




நங்கை : காதல் காதல் காதல், வெறும் வாய்ச்சொல்லில் வீரராயிருந்தென்ன பயன்?

கருணா : அடியே நங்கை, இந்த ஒற்றன் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே வரப்பிரசாதமல்லவா நீ, என்ன செய்வது நீயும் தாய்நாடும் என் இரு கண்களல்லவா. இதோ இப்பொழுது கூட பணி நிமித்தமே இங்கு வந்தேன், ஓடிப் போன மராட்டியர்கள் போக்குக் காட்டிவிட்டு திரும்ப படை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன், உடனே தளபதி பாலகணேசரிடம் தகவல் கொடுக்க வேண்டும்.

நங்கை : பணி நிமித்தம் வந்தவருக்கு பிறகென்ன காதல் நிமித்தம்? என் மேல் அக்கறையே இல்லையா? கடைசி வரை நீங்கள் காதல் வசனம் மட்டுமே பேசப் போகிறீர்கள்

கருணா : வதைக்காதே நங்கை, தகவலைக் கூறிவிட்டு சடுதியில் வருகிறேன்.

நங்கை : மராட்டியர் குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம், எங்களின் வீரத் தளபதி போர்ப் பிரபலம் அவர்களை ஒரு கை பார்த்து விடுவார், குதிரையில் செல்லாமல் தேரினில் செல்லும் தகுதி பெற்ற ஒரே தளபதி இந்தத் தென்னகத்திலே எங்கள் போர்ப் பிரபலனார் மட்டுமே என்பதை அறிவீர்தானே?

கருணா : அடிப் பாதகத்தி அப்படியா கதை கட்டியிருக்கிறான், அதன் உண்மைக் காரணம் கூறுகிறேன் கேள், மதுரை நாயக்கப் போரில் விதை உதை வாங்கிய பின் அவனால் குதிரை ஏற முடியாமல் போனது. தேரில் வக்கில்லாமல் சுற்றுவதற்கு இப்படியொரு வியாக்கியானம் கற்பித்துள்ளானா அந்தக் கபட வேடதாரி?

நங்கை : ஐயோ என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள் எங்கள் தளபதியாரை, என்ன இருந்தாலும் வீரர் அவர்.

கருணா : வீரனா? உன்னிடம் சொல்லக்கூடாது தான், காயடித்த காளை வம்ச விருத்திக்கு உதாவது என்பது பெரியோர் கூற்று. மதுரைப் போரில் என்னிடமே அறை வாங்கியவன் அவன், பிறகு கூறுகிறேன் அந்தச் சம்பவத்தை.


இடம் : சிவ மைந்தனின் மதியாலோசனைக் கூடம். போர்பிரபலம் திரு அலறிக் கொண்டே உள்ளே வருகிறார்.

போ.பி.தி : சிவ மைந்தரே கேட்டீரா இந்தக் கூத்தை, மராட்டியரை விரட்ட இந்தக் கிழப் பால கணேசன் நம்மை உடனடியாய்ப் போர்களத்திற்க்கு அழைக்கிறானைய்யா?

சி.மை : ஓ.விஷயம் அப்படிப் போகிறதா? சரி அதனால் என்ன? நமது படையுடன் சென்று மோதுவோமா? தங்களது கருத்தென்ன?

போ.பி.தி : எதற்கையா போர் போர் என்று அலைகிறீர்? உலகிலேயே வலிமையானவனின் ஆயுதம் அஹிம்சை, புத்தனை அறியாத இந்த அற்பக் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன் நான்.

சி.மை : இதில் அகண்ட மணியின் நிலைப்பாடு என்ன?

போ.பி.தி : அவன் சித்தம் கலங்கி பித்தம் தலைக்கேறி விட்டதையா? அனுதினமும் கண்ணாடி முன் நின்று கொண்டு போர் ஆமாம் போர் என்று பிதற்றுகிறான். சிவ மைந்தரே போரைப் பற்றி என்னிடம் கேளும் நான் கூறுகிறேன், வேண்டாமைய்யா இந்த விபரீத ஆசை.


அடுத்த பாகத்தில்..
மராட்டிய இளவரசனாக தேசிங்கு கூஜா, மராட்டியத் தளாபதியாக ஷாஜிச் சாமி தோன்றுவார்கள்.

தொடரும்...

மேலதிக விவரங்களுக்கு : கதவுகள்

வரலாற்றில் நாம் - சரித்திரத் தொடர் - 1


வரலாற்றில் நாம்: (நாடகம்)
அத்தியாயம் ஒன்று

காலம் : ஜெங்கிஸ்கானின் வட இந்தியப் படையெடுப்பு யூகங்கள் நிகழ்ந்த சமயம்

பங்கேற்பு : அகண்ட மணி, பால கணேசனார், போர்ப் பிரபலம் திரு, சிவமைந்தர்

அ.ம, போ.பி.தி , சிவ. மை மூவரும் ஒரு அரச மரத்தடியில் காத்திருப்பு, கையை பிசைந்து கொண்டே பா.க விற்காக காத்திருக்கிறார்கள்.

பா.க என்ட்ரி, குதிரையில் இறந்து இறங்கிக் கொண்டே,
தமிழகத்தின் தலை சிறந்த தளபதிகளை ஒருங்கே காண்பதில் மகிழ்ச்சி, நலமா அனைவரும்?

அனைவரும் ஒருமித்த குரலில், நலம் தளபதியாரே, வாரும் வாரும்

பா.க : மராட்டியர்களை தஞ்சாவூர் வரை விரட்டியடித்து விட்டு வந்தேன், அதனால் தான் உடனடியாகச் சந்திக்க முடியவில்லை.

போர்.பி.தி : மராட்டியர்கள் அவர்களாகவே சென்று விட்டதாக ஒற்றர்கள் தெரிவித்தார்கள், தாங்களெல்லாம் ஒன்றும் விரட்டவில்லையாம்

பா.க : அதனால் நான் பின் தொடர்ந்து சென்றது பொய்யென்றாகிவிடுமா?

போ.பி.தி : உம்மை யார் அவசியமில்லாமல் பின் தொடரச் சொன்னது

அ.ம : விடுங்கள் அந்தப் பேச்சை நாம் கூடியிருப்பது வேறொரு காரியமாக

போ.பி.தி : இது போன்ற நடக்காத போரில்தான் இவர் வெற்றி பெறுவார். ஹா ஹா உண்மயைக் கூற வேண்டுமல்லவா?

பா.க : வீணாக என் வாளுக்கு இறையாகாதீர் திரு

சி.மை : கோபம் வேண்டாம் பால கணேசரே, நாம் நமக்குள் சண்டயிடுவதால் தான் அன்னியர்கள் நம்மை குறைத்து எடை போடுகிறார்கள். ஜெங்கிஸ்கான் எனும் மங்கோலிய ஓநாய் இப்பொழுது வட இந்தியாவைக் குறி வைத்துள்ளானாம், ஒருவேளை அங்கு ஜெயமெனில் அடுத்தது நாம் தான்,

அ.ம : அவ்வாறு நிகழ்ந்து விட்டால் நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதை விவாதிக்கவே இந்த ஆலோசனைக் கூட்டம்.

போ.பி.தி : அவ்வாறு நிகழ்ந்தால் செங்கிஸ்கானை புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டியது என் பொறுப்பு, என் பின்னால் அணி திரளுங்கள், என் தோள்கள் திணவெடுக்கின்றன

பா.க : எதற்கு ஓடுவதற்கா இல்லை உணவருந்தவா?

போ.பி.தி : பால கணேசரே வயதில் மூத்தவர் என்பதால் உம் தலை இன்னும் உம்மிடமே உள்ளது, ஜாக்கிரதை

அ.ம : பொறுமைய்யா திரு, அவர் என்ன தப்பாகச் சொல்லிவிட்டார், மூன்றாண்டுகளுக்கு முன் நாயக்கர் படையெடுப்பில் நீர் என்ன செய்தீர் என்று நினைவுள்ளதா?

சி.மை : நான் ஞாபகப் படுத்துகிறேன் அவருக்கு, போரில் நாயக்கர்களின் கை ஓங்கியதுஇதோ இருக்கிறாரே பிரபல போர்த் தளபதி, போர்க்களத்தில் அப்படியே பொத்தென்று விழுந்து இறந்தவன் போல் நடித்தாரே

போ.பி.தி : ஏனைய்யா, ராசதந்திரத்தை அறியாத மூடர்களாயுள்ளீர்களே, அர்த்த சாஸ்திரம் தெரியாதா அதில் என்ன கூறியுள்ளது?

அ.ம : அதற்காக ஒரு எதிரி வீரன் உன் அல்லையில் குத்தி பரிசோதித்தானே, காயங்கள் இல்லா சாவா என்று மர்மஸ்தானத்திலே விட்டானே ஒரு உதை, அப்பொழுதும் பிணம் போல் படுத்திருந்தீரே

போ.பி.தி : இன்றும் வலிக்கிறதைய்யா அதை நினைத்தால், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அசைவின்றிக் கிடந்து தப்பித்தேன், என் ராசதந்திரம் என்றும் சோடை போனதில்லை

பா.க : நாதாரித்தனத்தை ராசதந்தரம் என்று கூறும் இந்த மூடனின் தலைமயில் ஒன்று கூட வேண்டுமாம். வீரர்களே கூடுங்கள் என் தலைமையில் விரட்டுவோம் செங்கிஸ்கானை.

அ.ம : பால கணேசரே, உங்கள் தலைமயை ஏற்பது ஒன்றும் கடினமில்லை, ஆனால் படையின் முன்னனியில் செல்லச் சம்மதமா?

பா.க : இதென்ன புதுப் பழக்கம், தளபதியின் வியூகம் தெரியாதா உங்களுக்கு, அவர் பின்னனியிலிருந்து வழி நடத்துவதுதான் போர் மரபு

சி.மை : அதானே எங்கே முன்னனியில் நிற்பாரோ என்று நினைத்தேன், பிண்ணனிதானே நீர்

போ.பி.தி : சிவ மைந்தரே செங்கிஸ்கான் இரு மருங்கிலும் தாக்குவானாம், பின்னால் நின்றாலும் கொலைவெறித் தாக்குதல் உண்டு, நாம் படையின் நடுவில் சென்று அரண் அமைத்து விடுவோம், என்ன சொல்கிறீர்

சி.மை : பந்திக்கு முந்துவதும் படைக்குப் பிந்துவதும் தானே நமது கலாச்சாரம் நீர் என்ன உளருகிறீர்

போ.பி.தி : ராசதந்திரமைய்யா, பின்னால் எதுவும் பிரச்சனையென்றால் அப்படியே செத்தது போல் விழுந்து விடு நூற்றுக்கு தொன்ணூறு சதவீதம் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.


போர் நடந்ததா? யார் தளபதி, போன்ற விவரங்கள் பிறகு.
இன்னும் பலர் நாடகத்தில் உள் வருகிறார்கள், ஒற்றனாக கருணா, அழகிய நங்கையாக கோப்பு மற்றும் பலர்.

தொடரும்...

மேலதிக விவரங்களுக்கு : கதவுகள்

Friday, December 19, 2014

ஜன்னல் - சிறுகதை - ஸ்டீபன் சன்சிகன் - கதை எண் 1

ஜன்னல் சிறுகதைப் போட்டி எண் - 1

ஸ்டீபன் சன்சிகன்

‪#‎எமலோகம்‬ / 24ம் திகதி / காலை 9.30

எமதர்மன் சற்றே அதிகமாக குழம்பி போயிருந்தான்
அவனுடைய பார்வை சித்திர குப்தனின் விண்டோவ்ஸ் கம்யூட்டர் மேலேயே இருந்தது
தன்னை தான் எமன் சந்தேகப்படுவதை உணர்ந்த சித்திரகுப்தன் சற்று சுதாகரித்துக்கொண்டு
“இல்லை குருவே ஒவ்வொரு நாளும் ஃபைர் வோல் அப்டேட் செய்தது வண்ணமே உள்ளோம் ஆக டேட பேசில் எந்த வைரஸ்ஸோ ஹக்கேர்ஸோ உள் நுழைய வாய்ப்பே இல்லை”
மீண்டும் தலையை சொறிந்து கொண்டார் எ.தர்மன்
சபையில் அப்படி ஒரு அமைதி எல்லோரும் பயந்து போய் எமதர்மனையே பார்த்து கொண்டு இருந்தார்கள்
பில் கேட்ஸின் புன்னகை மட்டும் மாறவே இல்லை, தான் முதலே போட்ட திட்டப்படி எமலோகத்தையே குழப்பத்தில் விட்டு விட்டேன் என….
நேற்றிரவு இறந்து எமலோகம் அழைத்து வரப்பட்ட பிஸ்கேட்ஸிற்க்கான புண்ணியங்கள் 50:50 வீதத்தில் இருந்தன சபையில் பாவ புண்னிய டேட்ட பேசிற்க்கு பொறுப்பான மெயிண்டைண்ட் எஞ்சினியேர்ஸ் மேல் பழி விழுந்தது விட்டது. அதிலும் சித்திர குப்தனின் அசட்டையீனம் தான் இதற்க்கு காரணம் என்பது எமதர்மனின் கோபம்
ஆயினும் என்ன செய்ய ஒருவராலும் பிரச்சனையை கண்டு பிடிக்க முடியவில்லை
எமதர்மன் சுதாகரித்துக்கொண்டு
“சரி மிஸ்டர் பில் கேட்ஸ் உங்க ரிக்குவெஸ்ட அக்சப்ட் பண்ணுறன் எமலோகத்தில் நீங்கள் எங்கு இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் அதற்க்கு முதலில் நீங்கள் எமது விண்டோவ்ஸ் ஃபைர் வோலை கரக்ட் பண்ணி தரணும்”
சரி என சம்மதித்த பில் கேட்ஸ் எமதர்மனுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்!

#எமலோகம்/25ம் திகதி/காலை 9.30

நரகத்தில் தண்டனைகள் தயாரகிக்கொண்டு இருந்தன
பில் கேட்ஸுக்கு இது நரகமா? இல்லை மினி அமெரிக்காவா என்ற சந்தேகம் எழும்பும் வண்ணம் ஸ்ரிவ் ஜொப்ஸ், பில் கேட்ஸ் என வரிசை நீண்டு சென்றது
”மிஸ்டர் பில் கேட்ஸ், உங்களுக்கு தான் நீங்கள் எங்கே இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தரப்பட்டதே அப்படி இருக்க பிறகு எதற்க்கு நரகத்தை தெரிவு செய்தீர்கள்”
நிமிர்ந்து ஜொப்ஸைப்பார்த்த பில்கேட்ஸ் கண்ணாடியை சரி செய்து கொண்டார் முகம் பயத்தால் வெளிறியிருந்தது

#எமலோகம்/24ம் திகதி/காலை 10.45

பில்கேட்ஸ் சொன்னது போலவே ஃபைர் வோல் பிரப்ளத்தை சரி செய்து விட்டார்,
நிமிர்ந்து எமதர்மனை பார்க்க
எமதர்மன் இருக்கையை விட்டு எழுந்தார்
“தங்க் யூ மிஸ்டர் பில் கேட்ஸ் நாங்க கேட்டத நீங்க செய்திட்டீங்க கண்டிப்பா உங்க விருப்பபடியே நீங்கள் எமலோகத்தில் எங்கு இருக்க வேண்டும் என்பதை தெரிவு செய்யலாம்”
வழக்கம் போல புன்னகையை தவழவிட்டபடியே
“முதலில் எனக்கொரு டெமோ வேண்டும் “ என கேட்டுக்கொண்டார் பில்கேட்ஸ்
” நிச்சயமாக”
எனக்கூறிக்கொண்டே அந்த பில்டிங்கின் இடப்பக்கம் உள்ள ஜன்னலுக்கு பில்கேட்ஸை அழைத்து சென்றார் எமதர்மன்
”இது தான் நரகம்”
எனக்கூறிக்கொண்டே ஜன்னல் திரைச்சீலையை விலக்கினார் எமதர்மன்
ஜன்னல் வழியே பார்த்த பில்கேட்ஸுக்கு ஆனந்தம்
KFC, Mc Donald, பிகினி கேள்ஸ் என நரகம் களை கட்டியிருந்தது!
“சரி நான் நரகத்திற்க்கே செல்கிறேன் “
என்றார் பில் கேட்ஸ்
”இல்லை இல்லை எதற்க்கும் சொர்க்கத்தையும் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்”
என கூறிக்கொண்டே பில்டிங்கின் மற்றைய பக்கத்தில்
இருந்த ஜன்னல் திரையை விலக்கினார் எமதர்மன்!
பசுமை நிறைந்திருந்தது வயல் வெளியில் யாரும் நிமிர்ந்து நிற்க்கவே இல்லை அனைவரும் குனிந்து வேலை செய்த வண்னம் இருந்தார்கள்
முகத்தை சுழித்து கொண்ட பில்கேட்ஸ்
“எனக்கு நரகம் தான் வேண்டும்” என்றார் கறாரகா!

#எமலோகம்/25ம் திகதி/காலை 9.45

”என்னது நரகத்தில் KFC,Mc D ஆ இங்கே கொதிக்கும் எண்ணை கொப்பறைகள் தானே இருக்கின்றன நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள் “ ஸ்டீவ் ஜொப்ஸ் கேள்வி தொடுக்க
பில் கேட்ஸிடம் இருந்து தலையை கவிழ்ந்த படி பதில் வந்தது
“அன்று நான் கண்டது ஜன்னல் வழியே கண்டது நரகத்தின் ஸ்கிறீன் சேர்வர்”
(Inspired from a pop story)

ஜன்னல் - சிறுகதை - ரமேஷ் கே சேலம் - கதை எண் 1

ஜன்னல் - சிறுகதை போட்டி எண் 1

ரமேஷ் கே சேலம்

"என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா
உருகாம உருகி நின்னேன்...."
தம்பீ!!! நால் ரோடு வந்தாச்சு இறங்குப்பா.
என கண்டக்டர் என்னைப் பார்த்து குரல் கொடுக்க... உருகுவதை சட்டென நிறுத்தி, அசட்டு சிரிப்புடன் எழுந்தேன்.
தினமும் இதே பேருந்தில் வருவதால் அண்ணன் அதட்டலாய் நினைவூட்டும் அளவுக்கு பழகிவிட்டிருந்தார்!!!
பேருந்து பயணத்தில் இளையராஜா பாடல்கள் சுகம்.
அதுவும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தால், கிரங்கிவிடுகிறேன்..
இது எதனால் இருக்கும் என நினைத்தவாரே வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்....
திடீரென யாரோ என்னை பார்ப்பது போல் தோன்றவே... சட்டென பார்த்தேன்...
ஜன்னல் கம்பிகளை பிடித்தவாரே ஒரு முகம் என்னை பார்த்தது!!!
தீர்க்கமான பார்வையாக அது இருந்தது. நான் பார்க்கிறேன் என்று பார்வையை மாற்றவில்லை. கிட்டத்தட்ட இது தினமும் தொடர்ந்தது. பல முறை அப்படி பார்க்கையில் நான் சிரித்திருக்கிறேன், ஆனால் பதிலுக்கு அந்த பக்கம் இருந்து முகம் பிரகாசமடையும், கண்கள் மலரும் அவ்வளவுதான். கிட்டத்தட்ட ஓரிரு மாதங்கள் இது தொடர்ந்தது. போய் ஏன் இப்படி பாக்கறீங்க தினமும்னு கேக்கலாமா?...
வேண்டாம்... நான் எங்கடா உன்ன பார்த்தேன்.. என திட்டிவிட்டால்...
வந்த எண்ணத்தை கைவிட்டேன்.
பின் பெங்களூரில் வேலை கிடைத்து, இங்கு வந்து கிட்டத்தட்ட மறந்தேவிட்டேன் அந்த ஜன்னலை!!!
"மச்சி இந்த ஆப்பர்ச்சூனிட்டி பாரேன். பெஸ்ட்டுடா கிடைச்சா யூ. எஸ்லயே கிட்டத்தட்ட செட்டில் ஆன மாதிரிதான். லைஃப் ஸ்டைலே மாறிடும்டா. இந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு ஓடிடலாம். அப்ளை பண்ணிப் பாப்போம்டா"
நெட்டில் எதோ காட்டி துள்ளிக்குதித்தான் நண்பன்.
எனக்கும் அதை படிக்க படிக்கவே. இப்போதே அங்கு வேலை கிடைத்துவிட்டதைப் போல மிதப்பாக இருந்தது.
"சரிடா இன்னைக்கு ஊருக்கு போறேன்ல. அம்மாட்டயும் இது பத்தி பேசறேன்"
"அப்ளை பன்றதுக்கே பர்மிசனா, இதெல்லாம் ஓவர்டா மச்சி. இவ்லோ சென்சிடிவ்வா இருந்தீனா முன்னேறவே முடியாது" என்றான். சிரித்துவிட்டு கிளம்பினேன்.
பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கையில்..
என்னையும் அறியாமல் கண்கள் அந்த ஜன்னலைப் பார்த்தது.
ஜன்னல் மூடியிருந்தது!
ஒரு பெண் வாசற்காலில் விளக்கு வைத்துக் கொண்டிருந்தாள். அருகில் செல்லும் போதுதான் கவனித்தேன். உள்ளே அந்த புகைப்படத்திற்கு மாலை போட்டிருந்தது. கீழே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
ஒரு மாதிரி படபடப்பாகிவிட்டது எனக்கு...
என்னது! தினமும் என்னை பார்த்த பார்வைக்கு அர்த்தம் சொல்லாமலே மரணமா!!!
"என்ன சார்.. யார் வேனும்?"
விளக்கு வைத்த பெண் என் நினைவை கலைத்த பிறகுதான்.. நான் அங்கேயே நின்றுவிட்டிருந்தது, மூளைக்கு உறைத்தது...
"இல்லீங்க. இவங்க.. இவங்க எப்படி?... "
"இவங்களை உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டு.. ஆச்சரியமாக பார்த்தாள் அந்த பெண்.
"ஆமாங்க. தெரியும். இவங்க எப்ப? எப்படி?... " அதற்கு மேல் என்ன கேட்பதென தெரியாமல் விழித்தேன்.
"வயசானா எல்லாம் போய் சேர வேண்டியதுதான!"
அந்த பதிலில் திருப்தியடையாத என் முகம் புரிந்தவளாய் தொடர்ந்தாள்.
"நான் பக்கத்து வீடுங்க. இந்த பாட்டிக்கு இங்க யாரும் கூட இல்ல. ஒரு வாரம் முன்ன இறந்துச்சு. எப்ப உயிர் போச்சுன்னு சரியா தெரியல"
அதிர்ச்சியாக இருந்தது எனக்கு தீர்க்கமான அந்த பார்வை கண் முன் வந்து போனது.
"பாட்டிக்கு பிள்ளைங்க... "
நான் முடிக்கும் முன்பே அவள் தொடர்ந்தாள்.
"பாட்டியோட பையன் வெளி நாட்ல வேலை செய்றாரு. தாத்தாவும் எப்போவோ போய் சேர்ந்துட்டாரு. பையன் இது சாவுக்கு வந்துட்டு உடனே கிளம்பிட்டாரு. வெளிநாடெல்லாம் போக வேனாம் இங்கயே இருன்னு எவ்வளவொ சொல்லுச்சி. அவர் கேக்கல.. இப்ப பாருங்க பெத்தவ சாவுக்கு கூட நேரத்துக்கு வர முடியாம, வந்தும் கடனேன்னு எதோ பண்ணிட்டு ஓடி... என்ன வாழ்க்கையோ. காச கொடுத்துட்டா ஆச்சா?!. இது உயிரோட இருக்கப்ப தன் வாழ்க்கைதான் பெரிசுன்னு.. அனாதையா விட்டுட்டு போயிட்டாங்க. இப்ப எதோ தீட்டாம் வாரிசுக்கு பிரச்சினையாயிடுமாம். அதுக்கு விளக்கு வைக்க என்கிட்ட சாவி கொடுத்துட்டு போயிருக்காங்க. உயிரோட இருக்கப்ப கூட, எங்கம்மாவ பாத்துக்கங்கன்னு ஒரு வார்த்தை எங்க கிட்ட சொல்லிட்டு போனதில்லை. இப்ப அவங்களுக்கு பிரச்சினை ஆயிடும்னு விளக்கு வைக்க சொல்றாங்க... என்ன ஜென்மங்களோ.. இந்த பாட்டி என்னடான்னா... ரோட்ல போறவன் வர்றவனையெல்லாம் பாத்துட்டு... எம்மவன் ராசு மாதிரியே இருக்கான்னு உருகும்... "
சுரீரென்றது எனக்கு... அந்த பார்வைக்கான அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. என்னையும் பார்த்து அவன் மகன் ராசுவை கற்பனையில் பார்த்திருக்கிறதா பாட்டி. என்ன கொடுமை இது. இப்படி ஒருவரை தவிக்கவிட்டு என்ன சுக போக வாழ்வு வேண்டி இருக்கிறது. ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டு கூட உருகித்தவிக்கும் நமக்கு உறவுத் தவிப்பு புரிவதில்லையோ!!!
அந்த பாட்டியின் புகைப்படத்தை பார்த்தேன், அதே தீர்க்கமான பார்வை!
"போக மாட்டேன் இங்கதான் இருப்பேன்" என்றேன் என்னையறியாமல்.
"என்ன.. என்ன சொன்னீங்க?"
"இல்ல... இல்ல ஒன்னுமில்லீங்க.. அந்த ஜன்னலை கொஞ்சம் திறந்து வைங்க ப்ளீஸ்"
என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்தேன்.
எனக்கு பின்னால் ஜன்னல் திறக்கும் ஓசை கேட்டது.

ஜன்னல் - சிறுகதை - திரு - கதை எண் 1

ஜன்னல் சிறுகதைப் போட்டி எண் - 1

மக்கள் பிரபலம் திரு

காட்சி 1

"மாப்ளே..இன்னைக்கு நைட்டு கெளம்புறேன்..எல்லாம் ரெடியா.?""
"எல்லாம் ரெடி மச்சான்..பாத்தூ..சூதானமா இருந்துகோ.."
"சரி மாப்ள..தங்கச்சி ரெடியா.?"
"ரெடி மச்சான்..அவதான் பயந்துட்டே இருந்தா..எக்ஜாம் எழுத மெட்ராஸ் தனியா போகனும்னு..நீயும் போறன்னு சொன்னதும் தான் பயப்படாம உன்னோட வர்றா..."
"சரி மாப்ளே.. நித்யாவ பாத்துக்கோ..அவதான் சங்கடப்பட்டா..தனியா இருக்க மாட்டேன்னு.."
"கவல படாம போடா மச்சான்..நான் பாத்துக்கமாட்டேனா.."

காட்சி 2

ரயில்..
"எப்படிங்க..அண்ணனையே ஏமாத்தி என்னை உஷார் பண்னீங்க"
"அதான் நான்..இதுக்குத்தான் கூஃபே வே புக் பண்ணுனேன்..இரு கதவ சாத்திட்டு வரேன்.."
வீடு..
"எப்படிங்க..அவரு ஏமாத்தி என்னை உஷார் பண்னீங்க.."
"அதான் நான்..போய் கதவ சாத்திட்டு வா.."
-இருபுறமும் திறந்திருந்தது..

ஜன்னல் - சிறுகதை - ரமேஷ்குமார் - கதை எண் 1

ஜன்னல் – சிறுகதை போட்டி எண் 1

ரமேஷ் குமார்

நாள் : டிசம்பர் 25ம் தேதி
நேரம் : காலை 10.00 மணி

சென்னையிலுள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் 30 ஆவது தளத்திலுள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலைக்கு தயாரான ஜனனி மெல்ல ஜன்னலை திறக்க ஆரம்பித்தாள்.

தென்தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரில் ஒரு குடிசை வீட்டில் தான் கடத்தி வந்த 12 வயது சிறுமியின் கைக்கட்டுகளை அவிழ்த்து விட்டு கற்பழிப்புக்கு தயாரான முருகன் , வேகமாக திறந்திருந்த ஜன்னலை மூடப் போனான்.

ஜனனி - முன்கதை முதல் பாகம்

மருத்துவ படிப்பை முடித்துவிட்டு தேடி வந்த அரசு வேலையை வேண்டாம் என உதறிவிட்டு உயிர் பிரியும் அந்த நொடியில் ஏற்படும் விளைவுகளையும்,இறப்பிற்கு பின்னான வாழ்வையும் அறிந்து கொள்வதற்கான ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவள்.15 வருடம் பிணங்களுடன் செய்த ஆராய்ச்சியின் விளைவாக நெக்ரோபீலியா நோயுற்றவளானாள்.இருந்தும் தன் ஆராய்ச்சியில் முதல் வெற்றியாக பிணங்களுக்கு உயிரூட்டி இரண்டு நாட்கள் வரை உயிர் வாழ வைத்தாள்.அடுத்த கட்டமாக அவைகளை பேச வைக்க முயற்சி மேற்கொண்டிருந்தாள்.

நாள் : டிசம்பர் 25ம் தேதி
நேரம் : காலை 10.10 மணி

அந்த உயரத்தில் இருந்து கிட்டதட்ட முழு சென்னை நகரமும் தெளிவாக தெரிந்தது , பெய்து கொண்டிருந்த மழையின் சாரல் ஜில்லென்று திறந்த ஜன்னலின் வழியே உள்ளே வர சில நொடிகள் அமைதியான ஜனனி ஒரு முடிவிற்கு வந்தவளாக முதல் அடியை ஜன்னல் திட்டின் மேல் எடுத்து வைத்தாள்.

முருகன் - முன்கதை

பொறியியல் படிக்க வற்புறுத்திய பெற்றோரை அடித்துக் கொன்று விட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்தவன்.வந்த சில நாட்களிலேயே ஒரு பெண்ணை காதலித்தான். ஒரு அருமையான சந்தர்ப்பத்தில் அப்பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் போது அவனால் உச்சம் அடைய முடியாமல் போகவே அந்த வெறுப்பில் அவளை துண்டு துண்டாக வெட்ட,தெரித்த ரத்தத்தில் அவன் உச்சம் அடைந்த கழிவு கலந்தது.அன்றிலிருந்து தன் உச்சத்திற்காக பல பெண்களை துச்சமாக கொல்ல ஆரம்பித்தான்.

நாள் : டிசம்பர் 25ம் தேதி
நேரம் : காலை 10.10 மணி

கடந்த பத்து நிமிடங்களில் அச்சிறுமியிடம் இருந்து எந்த ஒரு கத்தலோ எதிர்ப்போ இல்லாமல் ஒரு வெறித்த பார்வை மட்டுமே இருந்தது. இதனால் ஆச்சர்யத்துடன் அனைத்து உடைகளையும் களைத்து அச்சிறுமியின் மீது படர்ந்த முருகன் சற்றே தள்ளிக் கிடந்த கத்தியை நோக்கி கையை நகர்த்தினான்.

நேரம் : காலை 10.30 மணி

அறை முழுவதும் ரத்தம் சிந்திக் கிடக்க , அச்சிறுமி வாயில் ரத்தம் ஒழுக அதே வெறித்த பார்வையுடன் கழுத்தை பிடித்து அலறிக்கொண்டிருந்த முருகனை பார்த்துக் கொண்டிருந்தாள்.முருகனின் கழுத்து காது வரை கடிக்கப்பட்டிருந்தது.

ஜனனி - முன்கதை இறுதி பாகம்

நெக்ரோபீலியாவின் காரணமாக பிணங்களுடன் உறவு கொண்டாலும் அடிப்படையில் ஓரினச்சேர்க்கையாளரான ஜனனி பெண் பிணங்களின் மேல் தனி கவனம் செலுத்தினாள். பிணங்களை உயிரூட்டிய உடன் அவைகள் பேசாமல் ஒரு வெறித்த பார்வையுடன் இருப்பதும் அவைகளை ஒரு அளவிற்கு மேல் தொடும் போது ஆக்ரோஷமாக கடிப்பதுமாக இருப்பதைக் கண்டுணர்ந்தாள்.

நாள் : டிசம்பர் 23ம் தேதி
நேரம் : இரவு 8.10 மணி

தன் ஆராய்ச்சிக்காக தமிழகம் முழுவதும் அலைந்த ஜனனி தென்தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரில் அந்த 12 வயது சிறுமியைப் பார்த்தாள்.இரவு நேரத்தில் தனிமையில் வந்த அச்சிறுமியை காம வெறியிலிருந்த ஜனனி கொன்று உறவு கொண்டாள்.பிறகு உயிர்பிக்கும் மருந்தை செலுத்தி விட்டு சென்னையை நோக்கி கிளம்பினாள்.

நாள் : டிசம்பர் 25ம் தேதி
நேரம் : காலை 10.30 மணி

ஒன்றும் அறியாத சிறுமியை கொன்ற குற்ற உணர்ச்சி தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வந்தவள் இன்னும் குதிக்காமல் யோசித்துக் கொண்டே ஜன்னலின் திட்டில் நின்று கொண்டிருந்தாள்.ஆராய்ச்சிக்காக கொல்வது எல்லாம் குற்றமே அல்ல நீ சாதிக்க பிறந்தவள் நீ ஏன் இறக்க வேண்டும் என அவளது மனசாட்சி கேட்டுக் கொண்டேயிருந்தது.சற்றே குழம்பியவள் தன் முடிவை மாற்றிக் கொண்டு திட்டிலிருந்து இறங்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது ஒரு நாள் முன்பு இறந்து ஜனனியால் உயிரூட்டப்பட்ட அவளது வளர்ப்பு நாய் வெறியுடன் அவள் நின்று கொண்டிருந்த ஜன்னலை நோக்கிப் பாய்ந்தது.