வரலாற்றில் நாம்: (நாடகம்)
அத்தியாயம் நான்கு
எழுதுபவர் : பால கணேசன்
இடம் - மராட்டியர்கள் கூடாரம் இருக்கும் இடம்
பங்கேற்போர்- தேசிங்கு கூஜா மற்றும் தளபதி
மராட்டிய இளவரசனாக தேசிங்கு கூஜா : தளபதியாரே அப்படி என்னதான் இந்த மதுரையின் சிறப்பு? ஏக் தொ தீன் சார் என வரிசைப்படுத்தி கூறுங்கள்.
மராட்டியத் தளாபதியாக ஷாஜிச் சாமி : ஒன்றா இரண்டா? முதலில் மதுரை முனியாண்டி விலாஸ் உணவகத்தைப் பற்றி கூறுகிறேன். காடை, கவ்தாரி, கோழி, கொக்கு, பூனை, ஆந்தை, ஆடு, மாடு, பன்றி,பருந்து, முயல், கயல் இடையில் கரப்பான், பல்லி என எல்லா அசைவ உணவும் கிடைக்கும் இளவரசே..
தேசிங்கு : உம்மை தளபதியாக நியமித்தது என் தலைவிதி.. கூறுகெட்ட கூமுட்டையே.. குண்டி கழுவா கொசு முட்டையே.. நான் தின்பதற்கு கேட்கவில்லை. தினவெடுத்த என் தோள்களுக்கு அங்கே தீர்க்கமாக என்ன உண்டு என சொல்லும்..
ஷாஜி : அப்படிக் கேட்டீர்களா இளவலே! முதலில் மதுரை மீனாக்ஷி அம்மன் மந்திர். நான்கு வாசல் கொண்டது. நான்கின் முடிவிலும் தங்கம். ஆனால் ஒருவாசல் போனால் மீண்டும் அதே வாசல் திரும்பி வர வழி தெரியாமல் போகும். ஆயிரங்கால் மண்டப். பஹூத் அச்சா.. அங்கே ஒரு தூண் இருக்கிறது. நீங்கள் அதை தட்டினால் தானாகவே இன்னிசை எழுப்பும். நீங்கள் இரவு நேரங்களில் யாழ் மீட்டுகிறேன் என்று ரம்பம் போட்டு அறுப்பீர்களே.. நினைவிருக்கிறதா? அதை விட ஆனந்தமாய் இருக்கும். அந்த இடம் மிகவும் இருட்டாக இருப்பதால் மதுரையின் மக்கள் தொகை பெருக எந்த இடமும் காரணமாக இருக்கிறதாய் ஒற்றர்கள் சொன்னார்கள் இளவரசே!
கூஜா : சரி..சரி.. அந்த இடத்தில் இருப்பதிலேயே இருட்டான இடத்தை தேர்ந்தெடுத்து வையும்.. எமக்கு அங்கே சில ரகசிய அரசாங்க பணிகள் இருக்கிறது.
தளபதி : (உன் வண்டவாளம் எனக்கு தெரியுண்டா.. மதுரைப் பொண்ணுங்க தாவணியை ஓவியத்துல பார்த்துப்புட்டுதான நீ இந்த போருக்கு நான் போறேன் நான் போறேன்னு உங்கப்பன்கிட்ட குதிச்ச? அப்பவே தெரியுண்டா..) அப்படியே ஆகட்டும் இளவலே..
"மதுரை மரிக்கொழுந்து வாசம்.. என் ராசாத்தி உன்னுடைய நேசம்.." என்கிற பாடலை முனுமுனுத்தவாறே இளவரசன் தன கூடாரத்துக்குள் செல்கிறார்.)
இடம் - கருணாவின் வீடு.
பங்கேற்பு - நங்கை, கருணா, பால கணேசனார்
நங்கை : நீங்கள் வழக்கமாய் என்ன வேடம் போட்டு எதிரிகளை ஏமாற்றுவீர்கள் நாதரே?
கருணா : வண்டிக்காரன் வேடம். ஏன் நீ 23-ஆம் புலிகேசி வரலாறு படித்ததில்லையா? இருப்பதிலேயே சிறந்த வேஷம் அதுதான். அடி கொஞ்சம் பலமாகத்தான் இருக்கும். ஆனால் தகவல் சேகரிப்பதற்கு அது மிகமுக்கியம் என் கண்ணே!
நங்கை : என்னவோ போங்கள்.. அன்று உங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும்போது உங்கள் முதுகில் இனிமேலும் அடிவிழ இடமே இல்லாததை கவனித்தேன். கவனமாக இருங்கள் அத்தான். சாமான்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று உங்கள் வண்டியில் கூட எழுதியிருக்கிறீர்கள்.
அப்போது கதவை திறந்து கொண்டு பாலகனேசனார் உள்ளே வருகிறார்.
பா.க : என்ன கருணா காலையிலேயே கொஞ்சலா?
கருணா : அப்படியெல்லாம் இல்லை அய்யா.. தங்கள் வரவு என்னை அச்சமூட்டுகிறது. முக்கியமான சேதி இல்லாமல் தாங்கள் இப்படி வந்ததே இல்லையே..
பா.க : அம்மா நங்கை.. நீ சற்று உள்ளே போ..நாங்கள் ராஜாங்க விஷயமாக அளவளாவ வேண்டும். (கருணாவிடம் திரும்பி..) கருணா.. கோசல நாடு வழியாகத்தானே போனாய்?
கருணா : ஆம் அய்யா.. நீங்கள் அப்படித்தானே போகச் சொன்னீர்கள்.. தங்கள் பேச்சை மீறுவேனா?
பா.க : அப்படியென்றால் "அது" கிடைத்ததுதானே?
கருணா : ஆம் அய்யா.. வேண்டும் அளவுக்கு கிடைத்தது. ஆனால்...
பா.க : என்ன இழுக்கிறாய்? எதுவும் பிரச்சினையா?
கருணா : வரும் வழியில் மராட்டிய ஒற்றர்களோடு சேர்ந்து அவர்கள் ரகசியத்தை தெரிந்துகொள்ள வேண்டி சோமபானம் அருந்தியபோது சரக்கு காலியானதால் "அதை" நான் வைத்திருப்பதை அவர்கள் அறிந்து வலுக்கட்டாயமாக எடுத்து முடித்துவிட்டார்கள் அய்யா.. இதை தங்களிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல்தான் நான் தங்களை சந்திக்க வரவேயில்லை.
பா.க : என்ன தீர்ந்துவிட்டதா? எனக்காக நீ கொணர்ந்த வரியில்லா கோசல நாட்டு சோம பானத்தை குடித்தே தீர்த்த மராட்டிய மடையர்களுக்கு என் வாளால் பதிலுரைக்கிறேன். இது சத்தியம்.
தொடரும்...
மேலதிக விவரங்களுக்கு : கதவுகள்

No comments:
Post a Comment