ஜன்னல் – சிறுகதை போட்டி எண் 1
எழுதியவர் - ரமேஷ் குமார்
சனிப்பெயர்ச்சிப் பலன்களை ஆர்வமுடன் அதிகாலையில் தன் வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அருண் ஒரு கட்டிட கலை பொறியாளன்.இந்த சனிப்பெயர்ச்சியினால் தங்கள் வாழ்வே தலைகீழாக மாறிவிடும் என்ற வரிகளை சந்தோஷமாக படித்துக் கொண்டே காபிக் கோப்பையை கையில் எடுத்தான்.அப்பொழுது அவனது கைபேசி “ டங்கமாரி ஊதாரி புட்டுகினே நீ “ என அலறவே அதை எடுத்தான்.
ஹலோ......
.......................
ஹலோ யார் பேசுறீங்க........
....................
ஹலோவ்.........

மறுமுனை மீண்டும் மவுனம் சாதிக்கவே வெறுப்புடன் போனை கட் செய்து விட்டு “
காலங்காத்தால எவன்டாவன் வெறுப்பேத்திகிட்டு “ என்றபடியே ஜன்னலை திறக்கப்
போனான் அருண்.
ஜன்னலை திறந்த அடுத்த நொடியே அதீத ஒளி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரைந்து காணாமல் போனான்.
அருண் கண்விழித்துப் பார்த்த போது சனிகிரகத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தான்.சனி கிரகவாசிகள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தன.இவற்றைப் பார்த்த அதிர்ச்சியில் அருண் கொஞ்சம் கொஞ்சமாக உறைய ஆரம்பித்தான்.
சனி கிரகத்தின் மூத்த விஞ்ஞானி அருணை சற்று நேரம் ஆராய்ந்து விட்டு தன் சகாக்களை நோக்கி பேச ஆரம்பித்தார்,
“ இம்முறை தான் ஒரு சரியான ஏலியனை நமது ஆட்கள் கொண்டு வந்துள்ளார்கள்,இதன் மூளை நமது கிரகத்தின் கட்டிடக் கலைக்கு பெரிதும் உதவும், இதன் மூளையிலுள்ள அனைத்து தகவல்களும் எடுக்கப்பட்டுவிட்டன,அடுத்து நமக்கு தேவை ஒரு கணிப்பொறி வல்லுனரின் மூளை மட்டுமே,அதுவும் நமக்கு கிடைத்து விட்டால் பூமி கிரகத்தின் மீது நமது தாக்குதலை துவங்க சரியான நேரம் வந்துவிடும். ”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சனி கிரகத்தின் தலைமை ராணுவ தளபதி
“ எல்லாம் சரி ஆனால் நமது கிரகத்தில் மூளையிலுள்ள தகவல்களை எடுக்கும் வரை உயிருடன் தாக்குப்பிடிக்கும் ஏலியனை கண்டறிவதுதான் மிகவும் கடினமாக உள்ளது,இந்த கட்டிட கலை ஏலியனை கண்டறியவே ஏழரை ஆண்டுகள் ஆகி விட்டது, கணிப்பொறி வல்லுனரின் மூளைக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ ? “ என்றார்.
“ கவலைப்படாதீர்கள் இன்றைய மனிதப்பெயர்ச்சிப் பலனில் என் எண்ணங்கள் எல்லாம் கூடிய விரைவில் நிறைவேறும் என வந்துள்ளது அதன்படி அனைத்தும் நல்லபடியே நடக்கும்,நீங்கள் ஆகவேண்டியதை கவனியுங்கள் ” எனக் கூறியபடியே நடக்க ஆரம்பித்தார் விஞ்ஞானி.
3 மாதங்களுக்கு பிறகு பூமியில்
அருணின் காதலியும் கணிப்பொறி வல்லுனரருமான பிரியங்கா தன் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
“ அருணுக்கு என்ன ஆச்சுனே தெரியலடி எங்க போனான் என்ன ஆனான் ஒண்ணும் தெரியல ” என்றபோது அவளது கைபேசி சிணுங்கியது,
ஹலோ......
.......................
ஹலோ யார் பேசுறீங்க........
....................
ஹலோ.........
போனை கட் செய்து விட்டு “ சை இந்த கரண்ட் வேற அடிக்கடி போய்டுது, புழுக்கம் தாங்க முடியல “ என்றபடியே ஜன்னலை நோக்கிப் போனாள் பிரியங்கா.
அப்பொழுது தொலைக்காட்சியில் ஒரு பிரபல ஜோதிடர் “ நம்ம பூமிக்கே இப்ப ஜென்ம சனிதான் பிடிச்சு ஆட்டுது, இதற்கு பரிகாரமா நாம எல்லோருமே வாராவாரம் சனிக்கிழமை தவறாம சனீஸ்வரனுக்கு நெய்விளக்கு போடனும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சனிகிரகத்தின் முதல் குண்டு பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

This comment has been removed by the author.
ReplyDelete