சிறுகதைப் போட்டி எண் - 2
எழுதியவர் - அகிலன் தேசிங்கு
'இப்பதான் வர்றியடா " குரல் கேட்டு திரும்பினான் சதிஸ்.
மங்கிய வெளிச்சத்தில் சதிஷின் அப்பா கண்ணன் நின்று கொண்டிருந்தார் .

"ஆமாப்பா , ஊருக்குள்ள வர கடைசி வண்டியை விட்டுடேன்.
கொஞ்சம் தூரம் தானனு இந்த குறுக்கு வழியா நடந்து வந்தேன். " சொல்லிவிட்டு
கடிகாரத்தை பார்த்தான் மணி பதினொன்றை தாண்டி காட்டிக்ககொண்டிருந்தது

"எப்படிப்பா இருக்க "
" ம்நல்லா இருக்கேன் "
"உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டேன் "
"ம்ம்ம்".
இருவரும் முன்னே நடக்க நினைவுகள் பின்னோக்கி சென்றது.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ..
அகல்யா ..!
சதிஷ்ற்கு இந்த பெயரே அகல்யாவை காதலிக்க போதுமாயிருந்தது.
சாதி மதம் எதுவும் பார்க்கவில்லை.
அவனை பொருத்த வரை இது " தெய்வீகக் காதல்".
அதற்கு இதெல்லாம் தேவையில்லை என்று நம்பினான்.
இந்த தெய்வீகக் காதல் பற்றியெல்லாம் வீட்டிற்கு புரியவில்லை.
வீடா!, காதலா!
என்ற நிலையில் அவன் இரண்டாவதை தேர்ந்தெடுத்தான்.
இதோ ஐந்து ஆண்டுகள் ஆயிற்று.
பெங்களுரில் செட்டிலாகி இப்போது தான் அப்பாவை பார்க்க வந்து கொண்டிருக்கிறான்.
குளிர்ந்த காற்று மெதுவாய் வீசிக் கொண்டிருந்தது. அருகில் உள்ள சுடுகாட்டில் சிதை ஒன்று எரிந்து கொண்டிருந்தது
நினைவுகளில் இருந்து விடுபட்டவனாய் திரும்பி பார்த்தான்.
இருளில் அவர் முகம் சரியாய் தெரியவில்லை.

"இப்பதான் அப்பன் நினைப்பு வந்துச்சோ "
"-----------"
" உன்ன மாதிரி எங்களால முழுசா அத்துவிட முடியல "
" ------"
" உன்ன பார்த்ததுக்கு அப்பறம் தான் என் கட்ட வேகும்னு இருக்கு"
இதை சொன்னபோது உடைந்ததிருந்தது போல் தோன்றியது .
" ------- "
குற்றவுணர்ச்சியில் சதிஷிற்கு பேச்சே வரவில்லை
பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் வந்து கொணடிருந்தான்.
தன் தவறுகளுக்கு பரிகாரமாய் அப்பாவை கூடவே இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அதன் பிறகு அவர் பேசவில்லை .
வீட்டுக்கு வந்ததும் கூட்டமாய் இருந்தது.
சித்தப்பா தான் சதிஷை முதலில் பார்த்தது.

" என்ன சதிஷ் இப்ப வர ? "
" ஏன் என்னாச்சு "
"உனக்கு தெரியதா ? "
" என்ன சித்தப்பா சொல்றிங்க ஒன்னும் புரியல "
உன்ன பார்க்க முடியலயேங்கற ஏக்கத்துல உங்கப்பா போய் சேர்ந்துட்டார்.
அஞ்சு வருசமா வரல ,
இனிமேயும் நீ வர மாட்டேனு தான் கொஞச நேரத்துக்கு முன்னாடி கொண்டு போய் வர்ற வழில இருக்க சுடுகாட்டுல எரிச்சோம்." என்றார்.

அவன் வாசலை போய் பார்த்தான். நிழல உருவம் ஒன்று வந்த பாதையில் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.
No comments:
Post a Comment