சிறுகதைப் போட்டி எண் - 2
எழுதியவர் - ரமேஷ்குமார்
சென்னைக்கு மிக அருகில் உள்ள ஒரு அழகிய கிராமத்தில் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்த தன்னந்தனியான வீடு.நேரம் சரியாக இரவு 11 மணி
டமார்......
சத்தம் கேட்டு கண்விழித்த கோவிந்தன் மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.
டம்...டம்........டமார்..... டமார்..... டம்...டம்.......
தூக்கம் முழுவதும் கலையாமலேயே சத்தம் வந்த சமையலறையை நோக்கிப் போனான் கோவிந்தன்,சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு படுக்கையை நோக்கிப் போக எத்தனித்த போது,வீட்டின் ஜன்னல்கள் தானே திறந்து கொண்டு படபடவென அடிக்க ஆரம்பித்தது.
“ கோத்தா யார்ராது கைல மாட்ன மவனே செத்தடா ” என்றபடியே பீடியை பற்ற வைத்தான் கோவிந்தன்.அப்போது க்ரீச் என்ற சத்தத்தோடு வாசல் கதவு தானாக திறக்க ஆரம்பிக்க மிச்சமிருந்த கட்டிங்கை வேகமாக குடித்துவிட்டு வெறியுடன் வாசலுக்குச் சென்று லபக்கென்று அங்கே நின்று கொண்டிருந்த பேயைப் பிடித்தான்.
ஆ.......ஆ........ஆ........ஆ..........ஆ என பேய் கொடூரமாக அலற ஆரம்பிக்க உடனே கோவிந்தன்
உ......உ.....உ.....எனக்கும் கத்த தெரியும் மூடுறா வாயை நான் யாருனு தெரிஞ்சு வந்துருக்கியா இல்லை தெரியாம வந்தியா சொல்றா என்றான் ஆவேசத்துடன் பேயை பிடித்த பிடியை விடாமல்
தலைவர் அனுப்பிதான் வந்தனுங்க உங்களை பத்தி எதும் சொல்லல, நான் புதுசுங்க என்னை விட்ருங்க ப்ளீஸ் என கெஞ்ச ஆரம்பித்த பேயை வாசலில் கிடந்த செருப்பை எடுத்து அது பிய்யும் வரை அடித்தான் கோவிந்தன்.
ஏண்டா நேத்து செத்து இன்னைக்கு பேய் ஆன நாய் நீ உன்ன போய் என்கிட்ட அனுப்பி இருக்கானா அந்த பொட்டை அவன் மட்டும் திரும்ப மாட்டட்டும் அவன் பரம்பரையே இல்லாம செய்யுறன் பாரு,....
ஒரு பேய்னு கூட பாக்காம இப்டி புடிச்சு அடிக்கிறீங்களே யாருணே நீங்க என அழுதபடியே கேட்ட பேயை ஏளனமாக பார்த்துவிட்டு தொடர்ந்தான்,
என் பேரு கோவிந்தன்....... கோடாங்கி கோவிந்தன் எனக்கு இன்னொரு பேரும் இருக்கு அது குவாட்டர் கோவிந்தன்,25 வருசத்துக்கு முன்னால பேயோட்றதுதான் என் பொழப்பு......என் வாழ்க்கை, அப்பஎல்லாம் என்ன பார்த்தாலே எல்லாப் பேயும் அலறிஅடிச்சு ஓடும்,ஒரு நாள் ரத்தகாட்டேரியை கண்டதுண்டமா வெட்டி எறிஞ்சுட்டு வரும்போதுதான் பிசாச பார்த்தேன் அது மிஷ்கினோட பிசாசு இல்ல உன் தலைவன் கொள்ளிவாய் பிசாசு......
அப்புறம் என்னாச்சுணே.....
மயிராச்சு.....குறுக்க பேசுனே இன்னொரு செருப்பும் பிஞ்சு போய்ரும் மூடிட்டு சொல்றத கேளுடா......அப்பதான் மொதமொறையா அவனைப் பாக்குறேன் தெனவெட்டா என்கிட்ட வந்து நிறுத்து எல்லாத்தையும் நிறுத்துனு சொன்னான் இல்லனா என்னடா பண்ணுவனு கேட்டதுக்கு பொறந்த என் பையன கொன்னுடுவனு மிரட்டுனான் வந்த கோவத்துல தூக்கிப் போட்டு மிதி மிதினு மிதிக்க ஆரம்பித்தேன்,உடனே அந்த பிக்காலிப் பிசாசு உன் பையன் சங்க அறுத்துட்டு வந்து உன்ன வெச்சுகறனு கிளம்பிட்டான்......
ஒரு நமட்டுச் சிரிப்புடன் “அப்பாட நம்ம தலயே இவன்கிட்ட அடிவாங்கிருக்கா அப்ப நமக்கு ஒன்னும் அவமானம் இல்ல” என மனசுக்குள் நினைத்துக் கொண்டது பேய்.
“நான் உடனே ஒரு தாயத்து மந்திரிச்சு என் பையனோட அரைஞான் கயித்துல கட்டிட்டன்,உடனே கொள்ளிவாய் பிசாசோட மூஞ்சி குவார்ட்டர் அடிச்ச குரங்கு மாதிரி மாறிப் போச்சு,அத பாத்து நான் சிரிச்சுக்கிட்டே இருக்கும்போது உன் புள்ளயோட அரைஞான் கயித்த அறுத்து உன்ன அழ வெச்சு சாகடிக்கறேன்,அதுவர உன்ன நிம்மதியா தூங்கவும் உடாம பண்ணல என் பேரு கொள்ளிவாய் பிசாசு இல்லடானுட்டு போயிருச்சு,அப்புறம் ஒரு 10 வருவம் ராத்திரி ராத்திரி வந்து தொல்ல பண்ணிப் பாத்துச்சு அதுனால முடியாம போய் இப்ப கடைசி 15 வருசமா உன்ன மாதிரி அப்ரசன்டிகள அனுப்பிக்கிட்டு இருக்கு.சரி எனக்கு போதை அதிகமாயிருச்சு நீ பொழைச்சு போ குட் நைட்டு” என மட்டையானான் கோவிந்தன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு 11.30
சென்னையிலுள்ள ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தின் ஆய் போகும் அறையில் அரை நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தான் கோ.பரதன்,அவனுக்கு கீழே முட்டி போட்டு அமர்ந்து இருந்த அந்த வெள்ளைக்கார பைங்கிளி அவன் இடுப்பிலிருந்த அரைஞான் கயிற்றை ஒரு க்ரிப்புக்காக கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தாள்.
ஆனந்த மயக்கத்தில் சற்றே நிலை தடுமாறிய பரதன் அப்படியே பின்னோக்கிச் சரிய அரைஞான் கயிறு காதலியின் கையோடு போனது.அதுவரை மேற்கூரையில் காத்துக் கொண்டிருந்த கொள்ளிவாய் பிசாசு அப்படியே அவனை அலாக்க தூக்கி மல்லாக்க போட்டுக் கொண்டு சென்னைக்கு மிக அருகில் உள்ள அழகிய கிராமத்தை நோக்கி விரைந்தது.
அழகிய கிராமம் கோவிந்தனின் வீடு நேரம் இரவு 11.45
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........கோவிந்தா வெளிய வாடா ஆக்ரோசமாக கத்தியது பிசாசு
வாடா டம்மி பிசாசு என் பையன ஒருவழியா தூக்கிட்ட போல...ஏண்டா பிச்சைகார பிசாசே அவன பேண்டக் கூட முழுசா போட உடாமயா தூக்குவ....பரதா பேண்ட போட்டுக்கோ பயப்படாத அப்பா இருக்கன்.....டேய் முடிஞ்சா என் பையன என் கண்ணு முன்னாடி கொல்றா பாக்கலாம் என்றபடியே குவார்ட்டரை ராவாக குடித்தான் கோவிந்தன்.
வெறியான கொள்ளிவாய் பிசாசு பரதனை கொல்ல கடுமையாக முயற்சி செய்து ஒண்ணும் நடக்காமல் போகவே பேந்த பேந்த முழித்தபடியே கோவிந்தனை பார்த்தது.அப்பொழுது கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.
புல் போதையான கோவிந்தன் காதல் கொண்டேன் தனுஷை போல ஒரு கொடூரப் பார்வை பார்த்து விட்டு ஆட ஆரம்பித்தான்
கொள்ளி....... கொள்ளி.......நீ........டம்மி........டம்மி........
ஆடி முடித்து பிசாசை கொலவெறியுடன் அடித்துத் துவைத்தான்.
எப்டி.. எப்டி இது சாத்தியம் என பிசாசு முனகலுடன் கேட்க கோவிந்தன் மீண்டும் ஆடிக் கொண்டே கூற ஆரம்பித்தான்.
“நான் செத்து ஒரு நாள் ஆச்சுடா செத்த உடனே என்கிட்ட உதை வாங்குன உன் அப்ரசன்டி பேய்கள் எல்லாம் சேர்ந்து என்னை தலைவன் ஆக்கிருச்சு நான் தலைவன் ஆன உடனே உன்னோட எல்லாப் பவரையும் நான் புடுங்கிட்டேன் இப்ப நீ வெறும் டம்மி மேல வா உனக்கு 1000 வருச கடுங்காவல் தண்டனை காத்துக்கிட்டு இருக்கு” என்று கூறி பிசாசை தூக்கிக் கொண்டு பரதனை வாழ்த்தி விட்டு மேலே பறக்க ஆரம்பித்தான் கோடங்கி கோவிந்தன்.
மெல்ல வீட்டிற்குள் நுழைந்த பரதன் தன் தந்தையின் உடலை பார்த்து கதறி அழ ஆரம்பிக்கும்போது அவனது கைபேசி “ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற ரிங்டோனில் ரிங்காக ஆரம்பித்தது.
No comments:
Post a Comment