அத்தியாயம் ஒன்று
காலம் : ஜெங்கிஸ்கானின் வட இந்தியப் படையெடுப்பு யூகங்கள் நிகழ்ந்த சமயம்
பங்கேற்பு : அகண்ட மணி, பால கணேசனார், போர்ப் பிரபலம் திரு, சிவமைந்தர்
அ.ம, போ.பி.தி , சிவ. மை மூவரும் ஒரு அரச மரத்தடியில் காத்திருப்பு, கையை பிசைந்து கொண்டே பா.க விற்காக காத்திருக்கிறார்கள்.
பா.க என்ட்ரி, குதிரையில் இறந்து இறங்கிக் கொண்டே,
தமிழகத்தின் தலை சிறந்த தளபதிகளை ஒருங்கே காண்பதில் மகிழ்ச்சி, நலமா அனைவரும்?
தமிழகத்தின் தலை சிறந்த தளபதிகளை ஒருங்கே காண்பதில் மகிழ்ச்சி, நலமா அனைவரும்?
அனைவரும் ஒருமித்த குரலில், நலம் தளபதியாரே, வாரும் வாரும்
பா.க : மராட்டியர்களை தஞ்சாவூர் வரை விரட்டியடித்து விட்டு வந்தேன், அதனால் தான் உடனடியாகச் சந்திக்க முடியவில்லை.
போர்.பி.தி : மராட்டியர்கள் அவர்களாகவே சென்று விட்டதாக ஒற்றர்கள் தெரிவித்தார்கள், தாங்களெல்லாம் ஒன்றும் விரட்டவில்லையாம்
பா.க : அதனால் நான் பின் தொடர்ந்து சென்றது பொய்யென்றாகிவிடுமா?
போ.பி.தி : உம்மை யார் அவசியமில்லாமல் பின் தொடரச் சொன்னது
அ.ம : விடுங்கள் அந்தப் பேச்சை நாம் கூடியிருப்பது வேறொரு காரியமாக
போ.பி.தி : இது போன்ற நடக்காத போரில்தான் இவர் வெற்றி பெறுவார். ஹா ஹா உண்மயைக் கூற வேண்டுமல்லவா?
பா.க : வீணாக என் வாளுக்கு இறையாகாதீர் திரு
சி.மை : கோபம் வேண்டாம் பால கணேசரே, நாம் நமக்குள் சண்டயிடுவதால் தான் அன்னியர்கள் நம்மை குறைத்து எடை போடுகிறார்கள். ஜெங்கிஸ்கான் எனும் மங்கோலிய ஓநாய் இப்பொழுது வட இந்தியாவைக் குறி வைத்துள்ளானாம், ஒருவேளை அங்கு ஜெயமெனில் அடுத்தது நாம் தான்,
அ.ம : அவ்வாறு நிகழ்ந்து விட்டால் நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதை விவாதிக்கவே இந்த ஆலோசனைக் கூட்டம்.
போ.பி.தி : அவ்வாறு நிகழ்ந்தால் செங்கிஸ்கானை புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டியது என் பொறுப்பு, என் பின்னால் அணி திரளுங்கள், என் தோள்கள் திணவெடுக்கின்றன
பா.க : எதற்கு ஓடுவதற்கா இல்லை உணவருந்தவா?
போ.பி.தி : பால கணேசரே வயதில் மூத்தவர் என்பதால் உம் தலை இன்னும் உம்மிடமே உள்ளது, ஜாக்கிரதை
அ.ம : பொறுமைய்யா திரு, அவர் என்ன தப்பாகச் சொல்லிவிட்டார், மூன்றாண்டுகளுக்கு முன் நாயக்கர் படையெடுப்பில் நீர் என்ன செய்தீர் என்று நினைவுள்ளதா?
சி.மை : நான் ஞாபகப் படுத்துகிறேன் அவருக்கு, போரில் நாயக்கர்களின் கை ஓங்கியதுஇதோ இருக்கிறாரே பிரபல போர்த் தளபதி, போர்க்களத்தில் அப்படியே பொத்தென்று விழுந்து இறந்தவன் போல் நடித்தாரே
போ.பி.தி : ஏனைய்யா, ராசதந்திரத்தை அறியாத மூடர்களாயுள்ளீர்களே, அர்த்த சாஸ்திரம் தெரியாதா அதில் என்ன கூறியுள்ளது?
அ.ம : அதற்காக ஒரு எதிரி வீரன் உன் அல்லையில் குத்தி பரிசோதித்தானே, காயங்கள் இல்லா சாவா என்று மர்மஸ்தானத்திலே விட்டானே ஒரு உதை, அப்பொழுதும் பிணம் போல் படுத்திருந்தீரே
போ.பி.தி : இன்றும் வலிக்கிறதைய்யா அதை நினைத்தால், அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அசைவின்றிக் கிடந்து தப்பித்தேன், என் ராசதந்திரம் என்றும் சோடை போனதில்லை
பா.க : நாதாரித்தனத்தை ராசதந்தரம் என்று கூறும் இந்த மூடனின் தலைமயில் ஒன்று கூட வேண்டுமாம். வீரர்களே கூடுங்கள் என் தலைமையில் விரட்டுவோம் செங்கிஸ்கானை.
அ.ம : பால கணேசரே, உங்கள் தலைமயை ஏற்பது ஒன்றும் கடினமில்லை, ஆனால் படையின் முன்னனியில் செல்லச் சம்மதமா?
பா.க : இதென்ன புதுப் பழக்கம், தளபதியின் வியூகம் தெரியாதா உங்களுக்கு, அவர் பின்னனியிலிருந்து வழி நடத்துவதுதான் போர் மரபு
சி.மை : அதானே எங்கே முன்னனியில் நிற்பாரோ என்று நினைத்தேன், பிண்ணனிதானே நீர்
சி.மை : அதானே எங்கே முன்னனியில் நிற்பாரோ என்று நினைத்தேன், பிண்ணனிதானே நீர்
போ.பி.தி : சிவ மைந்தரே செங்கிஸ்கான் இரு மருங்கிலும் தாக்குவானாம், பின்னால் நின்றாலும் கொலைவெறித் தாக்குதல் உண்டு, நாம் படையின் நடுவில் சென்று அரண் அமைத்து விடுவோம், என்ன சொல்கிறீர்
சி.மை : பந்திக்கு முந்துவதும் படைக்குப் பிந்துவதும் தானே நமது கலாச்சாரம் நீர் என்ன உளருகிறீர்
போ.பி.தி : ராசதந்திரமைய்யா, பின்னால் எதுவும் பிரச்சனையென்றால் அப்படியே செத்தது போல் விழுந்து விடு நூற்றுக்கு தொன்ணூறு சதவீதம் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.
போர் நடந்ததா? யார் தளபதி, போன்ற விவரங்கள் பிறகு.
இன்னும் பலர் நாடகத்தில் உள் வருகிறார்கள், ஒற்றனாக கருணா, அழகிய நங்கையாக கோப்பு மற்றும் பலர்.

No comments:
Post a Comment